அசுவின் திரிபாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசுவின் திரிபாதி
Aswin Tripathy
பிறப்புபுவனேசுவரம், ஒடிசா, இந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
2010–முதல்

அசுவின் திரிபாதி (Aswin Tripathy) இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார். தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் ஒரு தொழில்முனைவோராகவும் இவர் இயங்கி வருகிறார். ஒடியா திரைப்படத் துறையில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக மிகவும் பிரபலமானவராக அறியப்பட்டார். 2023 ஆம் ஆண்டு டெலிவரி பாய் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது சைலேந்திர சமந்தரே புத்தாதித்யா மொகந்தி நடித்த ஒடியா மொழித் திரைப்படமாகும், இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. [1]

திரைப்பட வாழ்க்கை[தொகு]

அசுவின் திரிபாதி திரைப்படத் துறைக்குள் வந்தபின்னர் பல படங்களில் துணை நடிகராக பணியாற்றினார். பின்னர் இவர் தனது சொந்த விளம்பர நிறுவனமான ஐடோல் ஒடிசா என்ற நிறுவனத்தை நிறுவினார். இங்கு கோவிந்தா மற்றும் அனுப் சோனி போன்ற புகழ்பெற்ற நடிகர்களைக் கொண்ட பல விளம்பரங்களை இயக்கினார். பெட்ரோல் குற்றம் புகழ் அனுப் சோனி மற்றும் கோவிந்தா போன்ற தேசிய விளம்பரங்கள் உட்பட பல விளம்பரங்களை திரிபாதி இயக்கியுள்ளார். [2] 2019 ஆம் ஆண்டில், முன் பரதேசி சட்தேய் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றினார். 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய் காலத்தின் போது, அசுவின் திரிபாதி இசை காணொளிகளை உருவாக்கத் தொடங்கினார். அதன் பிறகு, இவர் 80 இசை காணொளிகளை இயக்கியுள்ளார். . 2021 ஆம் ஆண்டில், திரிபாதி தனது முதல் தொலைக்காட்சித் திரைப்படத்தை இந்திய அழகியாகப் புகழ் பெற்ற அர்ச்சிதா சாகூவின் நடிப்பில் துர்கதினாசினி [3] என்ற தலைப்பில் இயக்கினார்.

டெலிவரி பாய்[தொகு]

2023 ஆம் ஆண்டில், அசுவின் திரிபாதி டெலிவரி பாய் என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். ஒடியா மொழியில் உருவான இப்படம், விநியோகத் தொழிலில் ஒரு இளைஞனின் சிரமங்களைப் பற்றியதாகும். . திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றது. [4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுவின்_திரிபாதி&oldid=3730585" இலிருந்து மீள்விக்கப்பட்டது