அமுக்கிரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அசுவகந்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அமுக்கிரா
Withania somnifera, vrug, Manie van der Schijff BT.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
துணைத்திணை: Tracheobionta
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: இருவித்திலையி
துணைவகுப்பு: Asteridae
வரிசை: கத்தரி வரிசை
குடும்பம்: கத்தரிக் குடும்பம்
பேரினம்: Withania
இனம்: W. somnifera
இருசொற் பெயரீடு
Withania somnifera
(லி.) Dunal, 1852
வேறு பெயர்கள்

Physalis somnifera

Withania somnifera

அமுக்கிரா, அமுக்கரா, அமுக்கிரி அல்லது அசுவகந்தி (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) (Withania somnifera) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். இதன் வேரும் இலையுமே மருத்துவப் பயனுள்ளவை.

பெயர்கள்[தொகு]

அமுக்கிராவுக்கு அசுவகந்தி அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், அசுவகந்தம், இருளிச்செவி, வராககர்ணி, கிடிச்செவி ஆகிய வேறு பெயர்கள் உண்டு. ‘கந்தம்’ என்றால் கிழங்கு என்பதாக அசுவ‘கந்தம்’ என்றழைக்கப்படுகிறது. அசுவம் என்றால் வடமொழியில் குதிரை என்பது பொருள். குதிரை பலத்தை வழங்கும் என்பதால் அசுவகந்தா என்ற பெயரைப் பெற்றதாக கூறப்படுகிறது.[1] இதன் இலையை முகர்ந்தால் குதிரை நாற்றம் அடிப்பதால் அசுவகந்தா அல்லது அசுவகந்தா என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதன் இலையை அரைத்து கட்டிகளின் மேலே பூசினால் கட்டிகளை அமுக்கிவிடும் அதனால் இதனை தமிழில் அமுக்கிரா என்று அழைக்கிறார்கள்.

விளக்கம்[தொகு]

150 - 170 சென்ரி மீற்றர் உயரமாக வளர்கிறது. இதன் இலைகள் முட்டை வடிவம் கொண்டவை. இதன் இலைகளின் மேற்பரப்பில் மெல்லிய ரோம வளரிகள் காணப்படும். இச்செடியானது சிவப்பு நிறம் கொண்ட சிறிய அளவிலான காய்களைக் கொண்டிருக்கும்.

மருத்துவ குணங்கள்[தொகு]

  • அமுக்கிரா கிழங்கானது மூளையின் அழற்சி, வயோதிகம்[2], போன்றவற்றில் இருந்து மூளை விடுபட பெரிதும் உதவுகின்றது. இரத்த ஒட்டத்தை அதிகரிக்கவும், சீராக்கவும் இது உதவுகிறது[3]. சித்த, ஆயுர்வேத மருத்துகளில் முக்கிய இடம் வகிக்கிறது. சீன நாட்டு சின்செங் கிழங்கிற்கு இணையானது. நரம்பு தளர்ச்சி, உடல் வலிமை, ஆண்மை குறைவு ஆகியவற்றிற்கு இதன் கிழங்கு பயன்படுகிறது.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. டாக்டர் வி.விக்ரம் குமார் (2019 பெப்ரவரி 2). "முழு ஆரோக்கியம் தரும் அமுக்கரா". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 6 பெப்ரவரி 2019.
  2. "ஆண்மையை பெருக்கும் அதிசய "வயாகரா"!". பார்த்த நாள் அக்டோபர் 24, 2012.
  3. வார்ப்புரு:Cite web pool


"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுக்கிரா&oldid=2650187" இருந்து மீள்விக்கப்பட்டது