அசுதோசு அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசுதோசு அருங்காட்சியகம் (Asutosh Museum of Indian Art) இந்தியக் கலைகளின் பல்வேறு காலகட்ட மாதிரிகளைச் சேகரித்துப் பாதுக்காக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட ஒரு கலை அருங்காட்சியகமாகும். இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்நகரின் கல்லூரி சாலையிலுள்ள கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் 1937 ஆம் ஆண்டில் அசுதோசு அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதன் முதலாக நிறுவப்பட்ட பொது அருங்காட்சியம் இதுவேயாகும்[1]. 1906 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரையிலும் 1921 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரையிலும் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றிய சர் அசுதோசு முகர்சியின் பெயர் இந்தப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திற்குச் சூட்டப்பட்டது. குறிப்பாக வங்கக் கலைகளை சேகரித்து பாதுகாப்பது சிறப்பு நோக்கமாகக் கருதப்பட்டது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Asutosh Museum of Indian Art". Museum. University of Calcutta. மூல முகவரியிலிருந்து 2007-02-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-04-05.
  2. Goswami, Niranjan (2012). "Asutosh Museum of Indian Art". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Asutosh_Museum_of_Indian_Art.