அசுட்டெக் எழுத்துக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசுட்டெக்
வகை படவெழுத்து, Heiroglyphic
மொழிகள் நகுவாட்டில்
காலக்கட்டம் தற்போதுள்ள எழுத்துப்படிகள் 16 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை.
நெருக்கமான முறைகள் மிக்சுட்டெக்
ஒருங்குறி அட்டவணை U+15C00 to U+15FFF (tentative)[1]
Aztecwriting.jpg

அசுட்டெக் எழுத்துக்கள் (Aztec writing) அல்லது நகுவாட்டில் எழுத்துமுறை என்பது நடு மெக்சிக்கோவில் வாழ்ந்த நகுவா மக்களால் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறை ஆகும். இது படவெழுத்து, கருத்தெழுத்து ஆகிய முறைகளைத் தழுவியது. எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர் நடு அமெரிக்காவைக் கைப்பற்றியபோது பெரும்பாலான அசுட்டெக் நூல்களை எரித்துவிட்டனர். மெண்டோசா நூல், போர்போனிக்கசு நூல், ஒசுனா நூல் போன்ற சில நூல்களே எஞ்சின.

அசுட்டெக் எழுத்துக்கள் சொற்களைக் குறிக்காமல் சில கருத்துக்களையே குறிப்பதனால் இதனை ஒரு உண்மையான எழுத்துமுறையாகக் கொள்ள முடியாது. பலர் இதனை ஒரு தொடக்க எழுத்துமுறையாகவே கொள்கின்றனர்.