அசாதாரண உளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசாதாரண உளவியல் (abnormal psychology) என்பது உளவியலின் ஓர் பிரிவாகும். இது நடத்தை, உணர்ச்சி, சிந்தித்தல் ஆகியவற்றின் வழமைக்கு மாறான பாங்குளை ஆராய்கிறது. இது ஓர் முன்பின் ஆராயாத உளப் பிறழ்ச்சியாக விளங்கிக்கொள்ளப்படவோ அல்லது விளங்கிக் கொள்ளப்படாதிருக்கவோ வாய்ப்புள்ளது. நீண்ட வரலாறு விலகியிருக்கும் நடத்தையைக் கட்டுப்படுத்தவும் விளங்கிக் கொள்ளவும் முயல்கின்றது. இதில் கலாச்சார வேறுபாடும் எடுக்கப்படும் அணுகுமுறையில் உள்ளது. "அசாதாரணம்" என்பது சரியாக எந்த அர்த்தப்படுத்தலை சார்ந்திருக்கின்றது, பொது உளவியலில் கையாளப்படும் வேறுபட்ட கோட்பாடுகள் மற்றும் வேறுபட்ட நிலைகளுக்காக பல காரணிகளை அசாதாரண உளவியல் அடையாளப்படுத்துகின்றது. பாரம்பரியமாக உளவியலும் உயிரியல் விளக்கமும் பிரிக்கப்பட்டு, மன உடல் பிரச்சனைக்கு மெய்யியலின் இருபொருள் வாதம் பிரதிபலித்தல் மற்றும் மன பிறழ்வின் வகைப்படுத்தலை வேறுபட்ட அணுகுதலைக் கொண்டுள்ளது. அசாதாரணம் மூன்று வேறுபட்ட வகைகளைக் கொண்டுள்ளது. அவை சாதாரண நிலைக்குக் குறைவான, மேல் நிலையான, இயல்பு கடந்த ஆகிய அசாதாரணங்கள் ஆகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. Bridges, J.W. (January 1930). "What Is abnormal psychology". Journal of Abnormal Psychology 24 (4): 430-432. http://myaccess.library.utoronto.ca/login?url=http://search.proquest.com.myaccess.library.utoronto.ca/docview/219206219?accountid=14771. பார்த்த நாள்: 23 November 2012. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாதாரண_உளவியல்&oldid=3729823" இருந்து மீள்விக்கப்பட்டது