அங்கோலாவில் கருக்கலைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அங்கோலாவில் கருக்கலைப்பு (Abortion in Angola) என்பது பெண்ணின் உயிரை அல்லது ஆரோக்கியத்தை காப்பாற்றுவதாய் இருந்தாலும், கற்பழிப்பு அல்லது கருவில் குறைபாடுகள் ஏற்பட்டாலும் மட்டுமே சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. வெவ்வேறு நிலைமைகளின் கீழ் செய்யப்படும் எந்தவொரு கருக்கலைப்பும் பெண் மற்றும் அந்நடைமுறையைச் செய்யும் நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் (தண்டனைச் சட்டம் - உட்பிரிவு 154). கருக்கலைப்பின் விளைவாக பெண் இறந்துவிட்டால் அல்லது பயிற்சியாளர் வழக்கமான அடிப்படையில் கருக்கலைப்பு செய்தால், குற்றவியல் குற்றச்சாட்டுகள் மூன்றில் ஒரு பங்காக மேலும் அதிகரிக்கப்படும் (உட்பிரிவு. 155).

சட்ட ரீதியான தகுதி[தொகு]

1975 ஆம் ஆண்டு அங்கோலா சுதந்திரம் பெற்ற பிறகு 1886 போர்த்துகீசிய தண்டனைச் சட்டத்தின் கீழான உட்பிரிவுகள் மாற்றப்படாமல் விடப்பட்டது, கருக்கலைப்புக்கான அணுகல் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. கர்ப்பம் பெண்ணின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்தால் மட்டுமே கருக்கலைப்பு கிடைக்கும். [1] ஜனவரி 2019 ஆம் ஆண்டு சனவரியில் புதிய தண்டனைச் சட்டத்தை ஏற்க அந்நாட்டு தேசிய சட்டமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது உடல்நலம், கற்பழிப்பு மற்றும் கருவின் குறைபாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சூழ்நிலைகளில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமானதாக விரிவுபடுத்தியது. பிறகு சனாதிபதி இயோவா லோரெங்கோ புதிய சில விதிகளுக்கு தடை விதித்தார் மற்றும் கடுமையான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கோரினார். தேசிய சட்டமன்ற புதிய குற்றவியல் சட்டத்தின் (சட்டம் 38/20) இறுதி பதிப்பு 2020 ஆம் ஆண்டு நவம்பர் 4 அன்று ஒப்புதல் வழங்கப்பட்டது. 1929 போர்த்துகீசியக் குறியீட்டை மாற்றியமைத்த புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்துடன் சட்டம் 39/20 சட்ட சீர்திருத்தத்தில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று சனாதிபதி கையெழுத்திட்டார். 2020 ஆம் ஆண்டு சூலை மாதம் 22 அன்று இச்சீர்திருத்தம் சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. புதிய சட்டத் திருத்தங்கள் 90 நாட்களுக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதியன்று அமலுக்கு வந்தன. 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டது [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "United Nations World Abortion Policies 2013" (PDF).
  2. "Diario da Republica" (PDF) (in போர்ச்சுகீஸ்). Archived from the original (PDF) on 2020-11-23. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.