உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கேரி நாட்டுப்பண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கேரி நாட்டுப்பண்
Himnusz

ஆங்கிலம்: Hymn
அங்கேரி நாட்டுப்பண்ணின் அசல் இசைத் தாள்.

 அங்கேரி நாடு கீதம்
எனவும் அறியப்படுகிறதுIsten, áldd meg a Magyart (ஆங்கிலம்: God, bless the Hungarians)
A magyar nép zivataros századaiból (ஆங்கில மொழி: From the stormy centuries of the Hungarian people)
இயற்றியவர்ஃபெரேங்க் கோக்சே, 1823
இசைஃபெரேங்க் எர்கல், 1844
சேர்க்கப்பட்டது1844 (de facto)
1989 (de jure)

அங்கேரி நாட்டுப்பண் ("Himnusz" (pronounced [ˈhimnus]; English: ஆங்கில மொழி: "Hymn") என்பது அங்கேரியின் தேசிய கீதம் ஆகும். இது 19 ஆம் நூற்றாண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது, தற்காலத்தில் இப்பாடலின் முதல் பத்திமட்டும் அதிகாரப்பூர்வ விழாக்களில் பாடப்படுகிறது. இப்பாடலானது அங்கேரியின் தேசியக் கவிஞரான ஃபெரேங்க் கோக்சே என்பவரால் 1823இல் இயற்றப்பட்டது. இதன் தற்போதைய அதிகாரப்பூர்வ இசையானது, 1844இல் காதல் பாடல்களின் இசையமைப்பாளரான ஃபெரேங்க் எர்கல் என்பவரால் இசையமைக்கப்பட்டது. இப் பாடலானது தற்காலத்திய தேசிய பிரச்சனைகளை விட கடந்த கால ஆத்திரியப் பேரரசு காலத்துக் குறிப்புகளைக் கொண்டுள்ளது. அங்கேரியின் வரலாற்றை நன்கு அறிந்தவர்களால் மட்டுமே இந்தக் கவிதைத் தொகுப்பின் முழு பொருளை தெளிவாக உணர முடியும்.

பாடல் வரிகள்

[தொகு]

இதன் மூலப்பாடலானது மிக நீளமானது. கால ஓட்டத்தில் இது சுருக்கப்பட்டு முதல் பத்தி மட்டும் பாடப்படுகிறது. அந்த முதல் பத்தி பின்வருமாறு;

அங்கேரிய பாடல் வரிகள்[1] தமிழ் மொழிபெயர்ப்பு சொற்பொருள்[2] கவித்துவ பெயர்ப்பு[3]
தற்போதைய வடிவம்

Szánd meg Isten a magyart

Kit vészek hányának,

Nyújts feléje védő kart

Tengerén kínjának.

Bal sors akit régen tép,

Hozz rá víg esztendőt,

Megbűnhődte már e nép

A múltat s jövendőt!

இறைவா அங்கேரி நாட்டை ஆசிர்வதியும்,

உங்கள் கருணையாலும், கொடைத்தன்மையாலும்.

உங்கள் திருக் கரங்களின் பாதுகாப்பை நாட்டுக்கு அளியுங்கள்

அதன் எதிரிகளுடன் சச்சரவின் போது

தீவாய்ப்பால் கிழிபடும் போது

அதன் மீது நிவாரணக் காலத்தைக் கொண்டு வாரும்

இந்த நாடு கடந்த கால, எதிர்காலத்தின் அத்தனை பாவங்களுக்காகவும்

அனுபவித்து விட்டது.

Pity, O Lord, the Hungarians

Who are tossed by waves of danger

Extend over it your guarding arm

On the sea of its misery

Long torn by ill fate

Bring upon it a time of relief

They who have suffered for all sins

Of the past and of the future!

Pity, God, the Magyar, then,

Long by waves of danger tossed;

Help him by Thy strong hand when

He on grief's sea may be lost.

Fate, who for so long did'st frown,
Bring him happy times and ways;

Atoning sorrow hath weighed down

All the sins of all his days.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Written by Ferenc Kölcsey (1823)
  2. Translated by: Laszlo Korossy (2003). Magyar Himnusz.
  3. Translated by William N. Loew (1881)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கேரி_நாட்டுப்பண்&oldid=2732943" இலிருந்து மீள்விக்கப்பட்டது