அக்ரைலோயில் குளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
புரொப்-2-ஈனோயில் குளோரைடு
| |
வேறு பெயர்கள்
2-புரொப்பினோயில் குளோரைடு
அக்ரைலோயில் குளோரைடு | |
இனங்காட்டிகள் | |
814-68-6 | |
ChemSpider | 12588 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 399362 |
| |
பண்புகள் | |
C3H3ClO | |
வாய்ப்பாட்டு எடை | 90.51 g·mol−1 |
அடர்த்தி | 1.119 கி/செ.மீ3 |
உருகுநிலை | N/A |
கொதிநிலை | 75.0 °C (167.0 °F; 348.1 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அக்ரைலோயில் குளோரைடு (Acryloyl chloride) C3H3ClO என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். 2-புரொபினோயில் குளோரைடு அல்லது அக்ரைலிக் அமிலக் குளோரைடு என்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இச்சேர்மம் தெளிவான இளமஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது. கடும் காரச்சுவையுடன் [1][2] எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய நீர்மமான இச்சேர்மம் அமிலக் குளோரைடுகள் வகை சேர்மமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அக்ரைலிக் அமிலத்தில் இருந்து வருவிக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது [3].
தயாரிப்பு
[தொகு]அக்ரைலிக் அமிலத்துடன் பென்சாயில் குளோரைடு அல்லது தயோனைல் குளோரைடுடன் [3] சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் அக்ரைலோயில் குளோரைடைத் தயாரிக்கலாம். அக்ரைலோயில் குளோரைடு ஒளித்தூண்டு பலபடியாதல் வினைக்கு உட்படாமல் தடுப்பதற்காக வினைபடுபொருட்களுடன் சிறிதளவு ஐதரோகுயினோன் சேர்க்கப்படுகிறது.
வினைகள்
[தொகு]அமிலக் குளோரைடுகள் ஈடுபடும் அனைத்து பொதுவான வினைகளிலும் அக்ரைலோயில் குளோரைடு பங்கேற்கிறது. தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிந்து அக்ரைலிக் அமிலத்தைத் தருகிறது. கார்பாக்சிலிக் அமில சோடியம் உப்புகளுடன் வினைபுரிந்து நீரிலிகளை உருவாக்குகிறது.
பயன்கள்
[தொகு]பொதுவாகக் கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு சேர்மத்தில், அக்ரைலிக் பகுதியை அறிமுகப்படுத்தும் வினைகளில் அக்ரைலோயில் குளோரைடு பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Environmental Chemistry (2007). "Acryloyl chloride". Environmental Chemistry.com (J.K. Barbalace, inc). பார்க்கப்பட்ட நாள் December 21, 2007.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Physical & Theoretical Chemistry Laboratory (2005). "Safety data for acryloyl chloride". Physical & Theoretical Chemistry Laboratory. Archived from the original on அக்டோபர் 18, 2007. பார்க்கப்பட்ட நாள் December 21, 2007.
- ↑ 3.0 3.1 PatentStorm LLC (2006). "Process for the manufacture of acryloyl chloride". PatentStorm LLC. Archived from the original on சனவரி 14, 2013. பார்க்கப்பட்ட நாள் December 21, 2007.