அகீகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகீகா (அரபி:عقيقة) என்ற சொல்லுக்கு பிரசவத்தின் போதுள்ள சிசுவின் முடி என்றும் அல்லது குழந்தையுடையவும் மிருகத்துடயவும் உரோமத்தை குறிக்கும் ஒரு அரபி சொல்லாகும்

நடை முறையில் இசுலாமிய சமயத்தில் குழந்தை பிறந்த ஏழாம் நாள் குழந்தைக்கு முடியெடுத்து ஆண் குழந்தையாயின் இரு ஆடுகளும், பெண் குழந்தையாயின் ஓர் ஆடும் அறுத்து தானம் செய்யும் நடைமுறை ஆகும். ஏழாம் நாளில் அகீகா கொடுக்க முடியாதாயின் 14 அல்லது 21 ஆம் நாளில் தரலாம் என்று சில ஹதீஸ்களில் சொல்லப்பட்டிருப்பினும் ஏழாம் நாளன்றிப் பிற நாளில் தரப்படுவது அகீகா அன்று; சாதாரண தருமமே ஆகும்.

முகம்மது நபி (சல்) தனது பேரன் ஹசனுக்கு அகீகா கொடுத்த வேளையில் தலைமுடி எடைக்கு நிகரான வெள்ளியைத் தானமளித்ததாய்ச் சொல்லப்பட்டுள்ளது..

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகீகா&oldid=3457372" இருந்து மீள்விக்கப்பட்டது