அகமம்னான்


அகமெம்னான் (Agamemnon), கிரேக்க பழங்காவியமான இலியட்டில் மைசீனிய நாட்டின் அரசன். அரசர் அட்ரியசின் (Atreus) புதல்வனும் மெனிலாசின் (Menelaus) மூத்த சகோதரனும் ஆவார். கிரேக்கப் படையிள் முதன்மைத் தளபதியும் இவரே.
இட்ராயின் இளவரசன் பாரிசு (Paris) மெனிலாசின் பேரழகியான எலனை (Helen) கவர்ந்து சென்றதால், அகமெம்னானின் தலைமையின் கீழ, இட்ராய் தாக்கப்பட்டது. தேவதை ஆர்டிமிசு (Artemis) பாதகமான நிலையினை ஏவிவிட, அகமெம்னான் தனது மகள் இபிஜீனையாவை (Iphigeneia) தேவதையை அமைதிப்படுத்த பலிகொடுத்தார். பத்து ஆண்டுகள் நீடித்த போர் கிரேக்கர்களுக்கு வெற்றியினைத் தந்தது. வெற்றியுடன் நாடு திரும்பிய அகமெம்னான் அவனது மனைவி கிளைடெம்நெஸ்ட்ராவாலும் (Clytemnestra) அவளது காதலன் ஏஜீஸ்திசாலும் (Aegisthus) கொல்லப்பட்டார். அவரது மகன் ஓரஸ்டஸ் (Orestes) தனது தாயின் கொடிய செயலுக்காக பழிக்குப்பழியாக தாயையும் அவளது காதலனையும் கொன்றான்[1][2][3]
ஆதாரம்
[தொகு]- Britannica Ready Reference Encyclopedia.

மேற்கோள்கள்
[தொகு]- ↑ Homer, Iliad 9.145.
- ↑ Leeming, David (2005). Argos. Oxford: Oxford University Press. ISBN 9780199916481.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ Graves, Robert (2017). The Greek Myths - The Complete and Definitive Edition. Penguin Books Limited. pp. 418 & 682. ISBN 9780241983386.