உள்ளடக்கத்துக்குச் செல்

அகநாழிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகநாழிகை தமிழ்நாட்டில் வெளியாகும் சமூக கலை இலக்கிய இதழ். புதிய படைப்பாளிகளுக்கு வாய்ப்பளிப்பதையும், ஏற்கனவே எழுதிவரும் தமிழின் சிறந்த படைப்பாளுமைகளின் படைப்புகளை வெளியிடுவதிலும் அகநாழிகை கவனம் செலுத்துகிறது. இதன் ஆசிரியர் பொன். வாசுதேவன். இது அக்டோபர் 2009 முதல் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மதுராந்தகத்திலிருந்து வெளியாகிறது. 2013 முதல் செங்கல்பட்டில் இருந்து பதிப்பகமும், இதழும் செயல்படுகிறது. அகநாழிகை புத்தக நிலையம் சென்னை, சைதாப்பேட்டையில் 2013 முதல் 2016 வரை செயல்பாடுகளைத் தொடர்ந்தது. புத்தக விற்பனையகமும், இலக்கியக் கூட்டங்கள், புத்தக அறிமுக நிகழ்ச்சிகள், விமர்சனம், திறனாய்வுக் கூட்டங்கள் என பல குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை நடத்தியுள்ளது.

அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்

[தொகு]

அகநாழிகை பதிப்பகம் 2009 இல் துவங்கப்பட்டது. புதிய படைப்பாளிகளை இனங்கண்டு அடையாளப்படுத்தும் முயற்சியாக புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் தனித்துவமாக எழுதிவரும் படைப்பாளிகளின் முதல் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளது.[1] தமிழின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளின் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைத் தொகுப்புகள், சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கவிதைத் தொகுப்புகள்

[தொகு]
  1. கருவேல நிழல் - பா.ராஜாராம்
  2. கோவில் மிருகம் - என்.விநாயகமுருகன்
  3. நீர்க்கோல வாழ்வை நச்சி - லாவண்யா சுந்தரராஜன்
  4. கூர்தலறம் - TKB காந்தி
  5. உறங்கி விழித்த வார்த்தைகள் - மதன்
  6. தலை நிமிர்வு (தமிழிய தலித்திய கவிதைகள்) - பாரதி வசந்தன்
  7. பரத்தை கூற்று - சி.சரவணகார்த்திகேயன்
  8. ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் - செல்வராஜ் ஜெகதீசன்
  9. மயிரு - யாத்ரா
  10. மதுவாகினி - ந.பெரியசாமி
  11. நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன் - அபி மதியழகன்
  12. கடவுளின் செய்தி - அ.ரெத்தின சபாபதி
  13. இதழில் எழுதிய கவிதைகள் - சங்கவி
  14. விரல் முனைக் கடவுள் - ஷான்
  15. சொந்த ரயில்காரி - ஜான் சுந்தர்
  16. மௌன அழுகை - கோபி சரபோஜி
  17. மலைகளின் பறத்தல் - மாதங்கி
  18. ஏன் என்னைக் கொல்கிறீர்கள் - க.இராமசாமி
  19. என் வானிலே - நிம்மி சிவா
  20. யுகமழை - இன்பா சுப்ரமணியன்
  21. கவிதையின் கால் தடங்கள் (50 கவிஞர்களின் 400 கவிதைகள்) - தொகுப்பாசிரியர்: செல்வராஜ் ஜெகதீசன்
  22. அன்ன பட்சி - தேனம்மை லட்சுமணன்
  23. சிறகு விரிந்தது - சாந்தி மாரியப்பன்
  24. இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி
  25. தனியள் - தி.பரமேசுவரி
  26. அவளதிகாரம் - வசந்த் தங்கசாமி
  27. சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை - செல்வராஜ் ஜெகதீசன்
  28. மணல் மீது வாழும் கடல் - குமரகுரு அன்பு
  29. ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம் - உமா மோகன்
  30. அக்காவின் தோழிகள் - நீரை மகேந்திரன்
  31. தூக்கம் விற்ற காசுகள் - ரசிகவ் ஞானியார்
  32. மஞ்சள் முத்தம் - அ.ரோஸ்லின்
  33. ஆயிரம் நீர்க்கால்கள் - நந்தன் ஸ்ரீதரன்
  34. காற்றாய் கடந்தாய் - சித்துராஜ் பொன்ராஜ்
  35. உன்மத்தப் பித்தன் - பொன். வாசுதேவன்
  36. நிழலின் வாக்குமூலம் - பொன். வாசுதேவன்
  37. தேவதையின் அந்தப்புரத்தில் பட்டாம்பூச்சிக் குடியிருப்பு - ராஜகவி ராகில்
  38. தயவு - பொன். வாசுதேவன்

சிறுகதைத் தொகுப்புகள்

[தொகு]
  1. அய்யனார் கம்மா - நர்சிம்
  2. தொலைக்கப்பட்ட தேடல்கள் - வெ.ராதாகிருஷ்ணன்
  3. சுனை நீர் - ராகவன் சாம்யேல்
  4. நந்தவனம் - ஸ்ரீ
  5. தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் - இராய. செல்லப்பா
  6. அடை மழை - ராமலக்ஷ்மி
  7. குறுக்கு மறுக்கு - சிவகுமார் அசோகன்
  8. முப்பத்தி நாலாவது கதவு (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) - தமிழில்: புல்வெளி காமராசன்
  9. சக்கர வியூகம் - ஐயப்பன் கிருஷ்ணன்
  10. வற்றா நதி - கார்த்திக் புகழேந்தி
  11. அம்மாவின் தேன்குழல் - மாதவன் இளங்கோ
  12. என்றாவது ஒரு நாள் (ஆஸ்திரேலிய புதர்க்காடுறை மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள்) - ஹென்றி லாஸன் தமிழாக்கம்: கீதா மதிவாணன்
  13. கனவுப் பட்டறை - மதி
  14. மாறிலிகள் - சித்துராஜ் பொன்ராஜ் (சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான, சிங்கப்பூர் அரசின் ‘சிங்கப்பூர் இலக்கிய விருது - 2016’ (Singapore Literature Prize) பெற்ற தொகுப்பு)
  15. நம்பர் விளையாட்டு - கீழை அ.கதிர்வேல்
  16. விளிம்புக்கு அப்பால் (புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்) - தேர்வும் தொகுப்பும்: பொன். வாசுதேவன்
  17. யானை பறந்தபோது (இந்திய - சிறார் நாடோடிக் கதைகள்) - ரமேஷ் வைத்யா
  18. அக்கரைப் பச்சை (சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள்) - தொகுப்பாசிரியர்: பொன். வாசுதேவன்

நாவல்

[தொகு]
  1. நுனிப்புல் - வெ.இராதாகிருஷ்ணன்
  2. மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு - ராஜகவி ராகில்
  3. பங்களா கொட்டா - ஆரூர் பாஸ்கர்
  4. பெர்னுய்லியின் பேய்கள் - சித்துராஜ் பொன்ராஜ்
  5. மாறா மரபு - வெ.இராதாகிருஷ்ணன்
  6. கர்மவினை அல்ல பரிணாமம் - வெ.இராதாகிருஷ்ணன்

கட்டுரைத் தொகுப்புகள்

[தொகு]
  1. கலைஞர் எனும் கலைஞன் - டி.வி.இராதாகிருஷ்ணன்
  2. ஸ்ரீ சக்ரபுரி - ஸ்வாமி ஓம்கார்
  3. வெற்றிக்கோடு - மோகன்குமார்
  4. தமிழர் திருமணம் - சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்
  5. சீர்திருத்தப் போலிகள் - சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்
  6. கண்ணகி வழிபாடு - சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்
  7. வெயில் புராணம் - உமா மோகன்
  8. கலிகெழு கொற்கை (மீனவர் வாழ்வியலை முன்வைத்து ஜோ டி குருஸ் படைப்புலகம்) - தொகுப்பாசிரியர்: தி.பரமேசுவரி
  9. யாருக்கானது பூமி (சூழலியல், காட்டுயிர் பாதுகாப்பு, பறவையியல் கட்டுரைகள்) - பா.சதீஸ் முத்து கோபால் (தமிழ் பதிப்பாளர் மேம்பாட்டுக் கழகத்தின் 2015ம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுச்சூழல் புத்தக விருது பெற்ற நூல்)
  10. யாழ் மீட்டிய கண்கள் - ராஜகவி ராகில்
  11. பேயாய் உழலும் சிறுமனமே - இளங்கோ (டிசே தமிழன்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அகநாழிகை பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள புத்தகங்களின் விவரம்". Archived from the original on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2011-02-28.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகநாழிகை&oldid=3693541" இலிருந்து மீள்விக்கப்பட்டது