ஃபிளாபல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஃபிளாபல் (/fəˈlɑːfəl/; ஆங்கிலம்: Falafel; அரபு: فلافل) என்பது கொண்டைக் கடலையை அரைத்து பல்வேறு சுவைப்பொருட்களைச் சேர்த்து மோதகம் போன்ற வடிவில் தட்டி பொரித்து செய்யப்படும் ஒரு மத்தியகிழக்கு உணவு ஆகும். இதை பீற்ரா எனப்படும் ஒரு வகை ரொட்யை பை போன்று அமைத்து அதற்கு ஃபிளாபிலையும் பல்வேறு பிற மரக்கறிகளையும் சேர்த்துத் தருவர். இவற்றோடு தகினீ எனப்படு எள்ளினால் செய்த சுவைச்சாறு, உறைப்புச் சாறு, உள்ளிச் சாறு போன்றவற்றையும் சேர்த்துத் தருவர்.