பிளம்மியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஃபிளம்மியர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஃபிளம்மியர் அல்லது ஃபிளம்மிங்கர் (English: "flemish"; Dutch: “de Vlamingen”; French: “les Flamands”) என்பது ஐரோப்பாவிலுள்ள பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் டச்சு மொழி பேசும் மக்களில் குறிக்கிறது. ஃபிளம்மியர்கள் பெரும்பாலும் வடக்கு பிராந்தியமான 'ப்ளாண்டர்ஸ்' பகுதியில் காணப்படுகின்றனர். பெல்ஜியம் மக்கள்தொகையில் பெரும்பாலானோர் (சுமார் 60%) ஃபிளம்மியர்களே ஆவர்.

வரலாற்று ரீதியாக, ஃபிளம்மிங்கர் என்பது பண்டைய மாகாணமான ஃப்ளாண்டர்சில் வாழ்ந்தவர்களையே குறிக்கிறது. அன்றைய நாட்களில், ஃபிளம்மிங்கர் என்பது டச்சு மொழி ஃபிளம்மியர் மட்டுமன்றி, பிரெஞ்சு அல்லது பிகார்டு மொழி பேசியவர்களையும் குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளம்மியர்&oldid=2556720" இலிருந்து மீள்விக்கப்பட்டது