கூத்தன்குழி

ஆள்கூறுகள்: 8°13′01″N 77°46′48″E / 8.21694°N 77.78000°E / 8.21694; 77.78000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூத்தன்குழி
—  கிராமம்  —
கூத்தன்குழி
இருப்பிடம்: கூத்தன்குழி

,

அமைவிடம் 8°13′01″N 77°46′48″E / 8.21694°N 77.78000°E / 8.21694; 77.78000
நாடு  இந்தியா
மாவட்டம் திருநெல்வேலி
மக்களவைத் தொகுதி கூத்தன்குழி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கூத்தன்குழி (Kuthenkuly) தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கு மீனவர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பரதவர் இனத்தை சார்ந்தவர்கள்.

கோவில்கள்[தொகு]

  • திருக்காட்சி ஆலயம்
  • புனித கித்தேரி திருத்தலம்
  • திருச்சிலுவை திருத்தலம்
  • மிக்கேல் ஆதிதூதர் திருத்தலம்

பள்ளிக்கூடம்[தொகு]

  • புனித தெரசாள் தொடக்கப் பள்ளி
  • புனித வளன் தொடக்கப் பள்ளி
  • புனித கித்தேரி உயர்நிலைப் பள்ளி

கல்லூரி[தொகு]

  • பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரி


திருக்காட்சி ஆலய வரலாறு[தொகு]

நமது ஞானத்தந்தை தூய சவேரியார் கி .பி 1542 -ல் இந்தியாவிற்கு வந்து இறையேசுவின் மறைபரப்பு பணியை ஆற்றிய போது கடலோர மக்களை இறைபக்தி மிகுந்தவர்களாக மாற்றினார் என்பது வரலாறு ஏடுகளின் மூலம் நாம் அறிந்ததே . இதன் படி சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நமதூர் மக்கள் கிறிஸ்தவர்களாக மாறி ஆலயங்களை அமைத்து வழிபட்டு வந்தது தெளிவாக தெரிகிறது . இருந்தாலும் ஆதாரபூர்வமாக யேசுசபை குருக்களின் பதிவுகளின் படி 1558 ஆம் ஆண்டு நமது ஊரில் ஆலயம் இருந்ததாக தெளிவாக தெரிகிறது .

நமது ஊர் தனிப்பங்காக மாறுவதற்கு முன்பாக 1730 -ல் இடிந்தகரையின் துணை பங்காக இருந்தது தெரிகிறது . பங்கு பதிவேட்டின் அடிப்படையில் 1715 -ல் நம்மூரில் பிரெஞ்சுமிஷின் மூலமாக புனித ஸ்நாபக அருளப்பர் நினைவாக பங்கு ஆலயமும் கோவா மிஷின் மூலமாக புனித சூசையப்பர் நினைவாக மற்றொரு ஆலயமும் இருந்து வந்துள்ளது . பின்னர் 1924 -ல் நமது ஊர் தனிபங்காக மாறியது . பங்கு ஆலயமானது பழுதடைந்ததால் புதிய ஆலயம் ஒன்றை அமைக்க ஊர் மக்கள் அக்கறை கொண்டு 1930 -ல் அப்போதைய பங்கு தந்தை G . மைக்கிள் அடிகளார் அவர்களின் முயற்சியால் மேதகு ஆயர் திபூர்ச்சியுஸ் ரோச் ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது . பின்னர் பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலை காரணமாக தாமதப் பட்டு வந்ததை தெரிந்து கொண்ட மக்கள் மீண்டும் அக்கறை எடுத்து கொண்ட மறைமாவட்டமே வியக்கும் அளவிற்கு மிகப்பெரிய பிரமாண்டமான ஆலயம் ஒன்றை எழுப்பினர்

பிரமாண்டமான நமது ஆலயத்தின் அருள்பொங்கும் பலிபீடமானது அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. முன்பகுதியானது அழகிய வேலைப்பாடுகள் நிறைந்து கலைநயமிக்க முறையில் முதல் இரு ஆயர்களின் மறைமாவட்ட விருதுவாக்கான

"அன்பே எனது விண்மீன் "

"அன்பில் உண்மை ஆற்றல் " இவற்றை இரு பக்கமும் தாங்கி உள்ளது மற்ற ஆலயங்களை விட சிறப்பம்சமாகும். இந்த அழகான ஆலயத்தை திறந்து வைத்து அர்ச்சிக்க பங்குத்தந்தை வியாகுலம் அடிகளார் அவர்களின் முயற்சியால் மேதகு ஆயர் தாமஸ் பர்னாந்து ஆண்டகை அவர்களின் திருகரங்களால் 1966 ஜனவரி 5 ஆம் தேதி திறந்து வைத்து அர்ச்சித்து ஆசியுரை வழங்கும் போது இறைமகன் இயேசு பிறந்து மூன்று ஞானிகளுக்கு (கஸ்பார் , மெல்கியோர் , பல்த்தசார் ) காட்சியை வழங்கியதை நினைவுபடுத்தும் வகையில் புனித மூவரசர்களுக்கு அர்ப்பணமாக்கி திருக்காட்சி ஆலயம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் .


பல பங்குத்தந்தையர்களின் மூலம் பல வகைகளில் பராமரிக்கப்பட்டு வந்த ஆலயமானது 2006 ஆம் ஆண்டு புதுபிக்கப்பட வேண்டுமென்று ஊர்மக்களால் முடிவெடுத்து நமது அன்பு தந்தை J . கிளாரன்ஸ் தினேஷ் அடிகளார் அவர்களின் பெரும் முயற்சியால் கூத்தன்குழி பொதுமக்கள் அனைவரின் பேராதரவோடும் கட்டி முடிக்கப்பட்டு சிறப்பான முறையில் நவீனமயமாக்கப்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு யுவான் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் 2011 மே 11 ஆம் தேதி திறந்து வைத்து அர்சிக்கப்பட்டு மதுரை பேராயர் மேதகு பீட்டர் பர்னாந்து ஆண்டகை அவர்களால் மே 20 ஆம் தேதி பெருவிழா கொண்டாடப்பட்டது


இது "அன்பின் பிறப்பிடம் ! அருளின் இருப்பிடம் ! அமைதியின் உறைவிடம் !! மாணிக்கவிழாவை (40 ஆம் ஆண்டு முடித்து விட்டு 50 ஆம் ஆண்டு பொன்விழாவை நோக்கி 46 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆலயம்

திருக்காட்சி ஆலயம்
திருக்காட்சி ஆலயம்

'

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்தன்குழி&oldid=3373602" இலிருந்து மீள்விக்கப்பட்டது