மலம் கழித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குதப்பகுதியின் அமைப்பு

சமிபாட்டுப் பாதையிலிருந்து மலத்தைக் குதத்தினூடாக வெளியேற்றல் மலம் கழித்தல் (defecation) ஆகும். பொதுவாக இது அன்றாடம் மனிதர் செய்யும் செயற்பாடுகளில் ஒன்று. உடல் நலத்தைப் பேணுவதில் அன்றாடம் மலத்தைக் கழித்தல் என்பது அவசியமானதாகும்.

உயிரினங்கள் திட, திரவ, அரைத் திண்மநிலையில் உணவுப்பாதையிலிருந்து குதம் வழியாகக் கழிவுகளை வெளியேற்றும் உணவு செரிமானத்தின் கடைசி நிகழ்வே மலம் கழிப்பதாகும். மனிதர்கள் தினமும் சில முறைகளோ அல்லது வாரத்தில் சில முறைகளோ மலம் கழிக்கிறார்கள்[1]. பின்னியக்க தசைக் சுருக்கம் (peristalsis) எனப்படும் பெருங்குடல் சுவர்களின் தொடர் தசைக் சுருக்க அசைவுகளின் மூலம் உணவுப்பாதையிலிருந்து மலம் பின் பெருங்குடலுக்குத் (மலக்குடல்) தள்ளப்படுகிறது. செரிமானமாகாத உணவும் இவ்வழியாக வெளித்தள்ளப்படலாம். இது, செரிமானப் பண்பற்ற உணவு வெளியேற்றம் (egestion) எனப்படுகிறது.

உடலியக்கவியல்[தொகு]

மலக்குடல் விரிமுனை (rectum ampulla) செரிமானம் நடைபெற்றபின் இருக்கும் தேவையற்றப் பொருள்களின் தற்காலிகமான சேமிப்பிடமாகச் செயற்படுகிறது. வெளித்தள்ளப்படும் முன், மலம் நிரம்புவதால் மலக்குடல் சுவர் விரிவடைகிறது. இதனால், மலக்குடல் சுவர்களில் உள்ள நரம்புத் தொகுதியின் நீட்சி ஏற்பிகள் (stretch receptors) மூலம் சமிக்ஞைகள் பரிமாறப்பட்டு மலம் கழிக்க வேண்டிய உணர்வினைத் தூண்டுகின்றன. உட்புற மலத்துளை சுரிதசை (internal anal sphincter) தளர்வது, வெளிப்புற மலத்துளை சுரிதசை விரிவடைவது ஆகிய அனிச்சையாக நடைபெறும் மலக்குடல் தசைச் சுருக்கங்கள் மூலம், மலம் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படுகிறது. இவ்வித உணர்வு ஏற்பட்ட உடன் மலம் கழிக்காவிட்டால், மலக்குடலிலுள்ளப் பொருட்கள் மீண்டும் பெருங்குடலுக்குச் சென்று அதிகளவு நீர் உறிஞ்சப்பட்டு மீண்டும் மலத்தை வெளித்தள்ளும் சுருக்கங்கள் (அசைவுகள்) ஏற்படும்வரை மலம் சேமிக்கப்படுகிறது. மலம் கழிப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டால் மலம் கடினப்பட்டு மலச்சிக்கல் உண்டாகலாம். அதேப்போல அதிகப்படியான நீர் உறிஞ்சப்படும் முன்பே மலம் கழிப்பது மிக வேகமாக நிகழ்ந்தால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "A description of Normal Bowel Movements". 30 September 2013. பார்க்கப்பட்ட நாள் 29 November 2013.
  2. NIH. "Bowel Movement". Medline. http://www.nlm.nih.gov/Medlineplus/bowelmovement.html. பார்த்த நாள்: February 19, 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலம்_கழித்தல்&oldid=2545532" இலிருந்து மீள்விக்கப்பட்டது