உள்ளடக்கத்துக்குச் செல்

கேலூசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேலூசைட்டு
Gaylussite
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுNa2Ca(CO3)2·5H2O
இனங்காணல்
நிறம்நிறமற்றது, வெண்மை, மஞ்சள், சாம்பல்
படிக இயல்புபட்டகப் படிகங்களான சிறுமணிகள்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்பு[110] இல் சரிபிளவு
முறிவுசங்குருவம், நொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2.5
மிளிர்வுபளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒப்படர்த்தி1.93 – 1.99
ஒளியியல் பண்புகள்ஈரச்ச்சு (−)
ஒளிவிலகல் எண்nα = 1.444 nβ = 1.516 nγ = 1.523
இரட்டை ஒளிவிலகல்δ = 0.079
கரைதிறன்நீரில் சிதைவடையும்
பிற சிறப்பியல்புகள்தூள் பூக்கும்
மேற்கோள்கள்[1][2][3]

கேலூசைட்டு (Gaylussite) என்பது Na2Ca(CO3)2·5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இது நீரேறிய சோடியம் கால்சியம் கார்பனேட்டு வகை கனிமமாகும். கனிமத்தின் வழியாக ஒளி ஊடுருவும். பளபளப்பான வெள்ளை நிறத்தில் இருந்து சாம்பல், மஞ்சள் நிறத்தில் ஒற்றைச்சரிவச்சுப் பட்டகப் படிகங்களாக கேலூசைட்டு தோன்றுகிறது. நிலைப்புத்தன்மை அற்ற கனிமமான இது வறண்ட காற்றில் நீரிழக்கிறது. தண்ணீரில் சிதைவடைகிறது.[1]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் கேலூசைட்டு கனிமத்தை Gyl[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

கண்டுபிடிப்பு

[தொகு]

ஏரிகளைச் சேர்ந்த கார நீர்க்கட்டிகளில் இருந்து ஆவியாகி கேலூசைட்டு தோன்றுகிறது. அரிதாக காரவகைப் பாறைகளின் நரம்புகளில் தோன்றுகிறது. முதன்முதலில் 1826 ஆம் ஆண்டில் வெனிசுலாவின் மெரிடா மாநிலம், லாகுனிலாசு நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. பிரெஞ்சு வேதியியலாளர் இயோசப் லூயிசு கே-லூசாக்கு (1778-1850) நினைவாக கேலூசைட்டு என்று பெயரிடப்பட்டது.[2]

கேலூசைட்டு கனிமம் சமீபத்தில் (2014) இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள புல்தானா மாவட்டத்தின் லோனார் ஏரியில் இருப்பதாகப் பதிவாகியுள்ளது. பிலிசுடோசின் சகாப்தத்தின் போது விண்கல் தாக்கத்தால் லோனார் ஏரி உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[5] இது பூமியில் பாசால்டிக் பாறையால் அறியப்படும் நான்கு அதிவேக விண்கல் தாக்க பள்ளங்களில் ஒன்றாகும்.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Handbook of Mineralogy
  2. 2.0 2.1 Mindat
  3. Webmineral
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  5. "Geology". Government of Maharashtra. Gazetteers Department. பார்க்கப்பட்ட நாள் 2008-09-08.
  6. Deshpande, Rashmi (3 December 2014). "The Meteor Mystery Behind Lonar Lake". National Geographic Group. National Geographic Traveller Idia இம் மூலத்தில் இருந்து 6 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150106061220/http://www.natgeotraveller.in/web-exclusive/web-exclusive-month/the-meteor-mystery-behind-lonar-lake/. பார்த்த நாள்: 27 July 2015. 
  7. Anoop et al., Palaeoenvironmental implications of evaporative gaylussite crystals from Lonar Lake, central India, Journal of Quaternary Science, V., Issue 4, pp. 349–359, May 2013
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கேலூசைட்டு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேலூசைட்டு&oldid=4140472" இலிருந்து மீள்விக்கப்பட்டது