உள்ளடக்கத்துக்குச் செல்

கிப்சன் பாலைவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிப்சன் பாலைவனம்
வறண்ட கிப்சன் பாலைவனம்
மேற்கு ஆஸ்திரேலியாவில் கிப்சன் பாலைவனத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
சூழலியல்
மண்டலம்ஆஸ்திரலேசியா
பல்லுயிர்த் தொகுதிபாலைவனம் மற்றும் புதர் நிலங்கள்
எல்லைகள்மத்திய புதர் நிலங்கள், பெரிய மணல்-தனாமி பாலைவனம்மற்றும் விக்டோரியா பெரிய பாலைவனம்
புவியியல்
பரப்பளவு156,289 km2 (60,344 sq mi)
நாடுஆஸ்திரேலியா
மாநிலங்கள்மேற்கு ஆஸ்திரேலியா
வளங்காப்பு
வளங்காப்பு நிலைஒப்பீட்டளவில் நிலையானது / அப்படியே
பாதுகாக்கப்பட்டது91,274 km² (58%[1]
கிப்சன் பாலவனத்தில் பயணிக்கும் நான்கு சக்கர வாகனம்

கிப்சன் பாலைவனம் (Gibson Desert), மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்த பாலைவனம். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பெரிய பாலைவனம் மற்றும் பெரிய மணல் பாலைவனம், தனாமி பாலைவனம் மற்றும் சிம்சன் பாலைவனம் ஆகியவற்றுக்கு அடுத்து இது 5வது பெரிய பாலைவனம் ஆகும். இப்பாலைவனம் 155,000 சதுர கிலோமீட்டர்கள் (60,000 sq mi) பரப்பளவு கொண்டது. இது பல பாலைவன விலங்குகளின் தாயகமாக உள்ளது.

வரலாறு

[தொகு]

இப்பாலைவனத்தை1874ல் எர்னஸ்ட் கில்ஸ் என்பவரால் முதன்முதலில் கடக்கப்பட்டது. கில்ஸ்சின் பயணத்தின் போது உடனிருந்தவரான ஆல்ஃபிரட் கிப்சன் குடிநீரைத் தேடி அலையும் போது காணாமல் போனார். எனவே அவரது நினைவாக இப்பாலைவனத்திற்கு கிப்சன் பாலைவனம் எனப்பெயரிடப்பட்டது.[2]

அமைவிடம் மற்றும் விளக்கம்

[தொகு]

மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்த கிப்சன் பாலைவனம், பெரிய மணல் பாலைவனத்திற்கு தெற்கிலும்; சிறு மணல் பாலைவனத்திற்கு கிழக்கிலும்; மற்றும் விக்டோரியா பெரிய பாலைவனத்திற்கு வடக்கிலும் அமைந்துள்ளது.

தட்ப வெப்பம்

[தொகு]

கிப்சன் பாலைவனத்தின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 200 முதல் 250 மில்லிமீட்டர்கள் (7.9 முதல் 9.8 அங்) ஆகும். இங்கு கோடைக்கால வெப்பம் 40 °C (104 °F) மற்றும் குளிர்கால வெப்பம் 18 °C (64 °F) முதல் 6 °C (43 °F) வரை உள்ளது.[3]

பூர்வகுடி மக்களின் வாழ்விடம்

[தொகு]

பிண்டுபி ஆத்திரேலியப் பழங்குடிகள் கிப்சன் பாலைவனத்தில் அரை-நாடோடிகளாக வாழ்கின்றனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிப்சன்_பாலைவனம்&oldid=4121654" இலிருந்து மீள்விக்கப்பட்டது