ஆதாமின் சாபம்
ஆதாமின் சாபம்/ஆதாம் கர்சு:ஏ புயூட்சர் வித்தவுட் மென் (Adam's Curse: A Future Without Men (Adam 's Curse: A Story of Sex, Genetics, and the Extinction of Men) 2003ஆம் ஆண்டு ஆக்சுபோர்டு பல்கலைக்கழக மனித மரபியல் பேராசிரியர் பிரையன் சைக்சு எழுதிய புத்தகம் ஆகும். மனித ஒய் பால்குறி நிறப்புரியின் தொடர்ச்சியான சிதைவு காரணமாக 5,000 தலைமுறைகளுக்குள் (தோராயமாக 125,000 ஆண்டுகள்) ஆண்கள் அனைவரும் அழிந்துவிடுவார்கள் என்பது இதன் சாராம்சம் ஆகும்.[1][2]
மனிதக்குலத்தின் உயிர்வாழ்விற்கான விருப்பங்களில் ஒன்று பெண்களால் இருபாலர் இனப்பெருக்கம் என்று சைக்சு கருதுகிறார். ஒரு பெண்ணின் கரு முட்டைகள் மற்றொரு பெண்ணின் உட்கரு எக்சு நிறப்புரிகையினால் கருவுற்றது. இது வெளிச் சோதனை முறை கருத்தரித்தல் முறைகளைப் பயன்படுத்திப் பொருத்தப்பட்டது. ஆண்மை மற்றும் ஆண் கருவுறுதலுக்குக் காரணமான பால் நிர்ணய பகுதி ஒய் புரதம் மற்றும் இதனுடன் தொடர்புடைய மரபணுக்களை மற்றொரு நிறப்புரிகைக்கு நகர்த்துவதற்கான சாத்தியத்தையும் இவர் அறிமுகப்படுத்தினார். இதை இவர் "அதோனிசு நிறப்புரி" என்று குறிப்பிடுகிறார். இது XX மரபுத்திரி அமைப்பு மூலம் வளமான ஆண்களை உருவாக்குகிறது.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Williams KJ. Adam’s curse A future without men. J Clin Invest. 2004 Oct 1;114(7):870. doi: 10.1172/JCI23258. PMCID: PMC518678.
- ↑ Bryan Sykes (2004). Adam's Curse: A Future Without Men. Norton & Company. p. 318. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0393058964.
- Sykes, Bryan (2003), Adam's Curse: A Future Without Men, Bantam, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-593-05004-5