ஜியோர்கோஸ் ப்ரோவியஸ்
Appearance
ஜியோர்கோஸ் ப்ரோவியஸ் ( கிரேக்கம்: Γιώργος Προβιάς ) ஒரு கிரேக்க நடனக் கலைஞரும், நடிகரும், நடன இயக்குநரும் என பன்முக திறமை கொண்டவராவார், பிரபலமான கிரேக்க நாட்டுப்புற நடனமான சிர்தகியை மற்ற வகை கிரேக்க நடனங்களுக்கு சொந்தமான குறிப்பிட்ட கூறுகளைப் பயன்படுத்தி உருவாக்கியவர் இவரே.[1][2] 1964 ம் வெளியான சோர்பா என்ற கிரேக்கன் திரைப்படத்தில் இந்த நடன வகையான சிர்தகி ஆடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. அதுமுதல் கிரேக்க நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் இவ்வகை நடனம் தவறாது ஆடப்பட்டு வருகிறது.
ஜியோர்கோஸ் ப்ரோவியாஸ், நான் உன்னை மட்டும் விரும்புகிறேன் (எசெனா மோனோ அகாபோ) (1970), பொய்யர்களின் அரசன் (1971) மற்றும் கிரேக்கத்திலிருந்து நீல மணிகள் (1967) ஆகிய திரைப்படங்களுக்காகவும் பரவலாக அறியப்படுகிறார்.[3]
கலைப்படைப்புகள்
[தொகு]அங்கீகாரம் அளிக்கப்பட்ட படைப்புகள்
[தொகு]- "அர்ஹிப்செஃப்டாரோக்கள்", 1971, நடன பயிற்சியாளராக வரவு வைக்கப்பட்டது
- "நான் உன்னை மட்டும் விரும்புகிறேன் (Εσένα μόνο αγαπώ)" பரணிடப்பட்டது 2009-08-21 at the வந்தவழி இயந்திரம் ( நான் உன்னை மட்டும் விரும்புகிறேன்), 1970, நடன நடனம்
- மேகமூட்டமான எல்லைகள், 1968, அவரே
- "எடைரியா தவ்மடன்", 1962, நடனக் கலைஞர்
அங்கீகாரம் அளிக்கப்படாத படைப்புகள்
[தொகு]- சிர்தகி ("சோர்பாவின் நடனம்") சோர்பா என்ற கிரேக்கன் திரைப்படம் [1][4]
- ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருபோதும் இல்லை [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Γιώργος Προβιάς – Ο άγνωστος δημιουργός του χορού του Ζορμπά (συρτάκι)" (in கிரேக்கம்)
- ↑ "Sirtaki. Més enllà de Zorbàs" (retrieved July 6, 2013)
- ↑ [1]
- ↑ [2] பரணிடப்பட்டது 2011-10-02 at the வந்தவழி இயந்திரம் (in கிரேக்கம்)
மேலும் படிக்க
[தொகு]- பனோஸ் ஜெரமனேஸ், வாசிலேஸ் லூம்ப்ரினெஸ் எழுதிய ஹெ ஸோ மௌ ஹெனா ட்ராகௌடி
- கி ஹோசோஸ் உபர்செயிஸ் தா உபர்ச்சோ..., கோஸ்டாஸ் பாலஹவுடிஸ்