தேசிய புகைப்பட விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலை, கலாச்சாரம், மேம்பாடு, பாரம்பரியம், வரலாறு, வாழ்க்கை, மக்கள், சமூகம் மற்றும் பாரம்பரியம் போன்ற பல்வேறு அம்சங்களை புகைப்படம் எடுத்தல் மூலம் மேம்படுத்துவதற்கும், தொழில்முறை மற்றும் பொழுதுபோக்கு புகைப்படக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்கு இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பத்திரிகை தகவல் பணியகத்தின் புகைப்படப் பிரிவு ஒவ்வொரு ஆண்டும் தேசிய புகைப்பட விருதுகள் என்ற தலைப்பில் விருதுகளை வழங்குகிறது.[1]

தேசிய புகைப்பட விருதுகள் மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன.

  • வாழ்நாள் சாதனையாளர் விருது,
  • தொழில்முறை புகைப்படக் கலைஞர்களுக்கான விருது மற்றும்
  • பொழுதுபோக்கு புகைப்படக் கலைஞர்களுக்கான விருது.

வாழ்நாள் சாதனையாளர் விருது ரூ. 3,00,000/- ரொக்கப்பரிசினை கொண்டது.

தொழில்முறை புகைப்படக் கலைஞர்களுக்கான தொழில் வல்லுநர்களுக்கான பிரிவின் கீழ் வழங்கப்படும் ஆண்டின் தொழில்முறை புகைப்படக் கலைஞர்' விருதுடன் ரூ. 1,00,000/- ரொக்கப்பரிசும், மற்றும் ஐந்து சிறப்புக் குறிப்பு விருதுகளுடன் ரூ. தலா 50,000/-. ரொக்கப்பரிசுமாக ஆறு விருதுகளை கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கருப்பொருளை மையமாக கொண்டு வழங்கப்படும்,

பொழுதுபோக்கு புகைப்படக் கலைஞர்களுக்கான, பொழுதுபோக்காளர்களுக்கான பிரிவின் கீழ் ஒரு 'ஆண்டின் பொழுதுபோக்கு புகைப்படக் கலைஞர்' விருது ரூ.75,000/- ரொக்கப் பரிசு மற்றும் ஐந்து சிறப்பு குறிப்பு விருதுகள் தலா ரூ.30,000/- ரொக்கப் பரிசு என ஆறு விருதுகளை கொண்டது. இந்த விருதும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கருப்பொருளை மையமாக கொண்டு வழங்கப்படும்,

விருது வழங்கும் விழாவை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் புகைப்படப் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.

வெற்றியாளர்கள்[தொகு]

ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது ஆண்டின் தொழில்முறை புகைப்படக் கலைஞர் ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு புகைப்படக் கலைஞர் Ref
2015 (4வது தேசிய புகைப்பட விருது) சுரேந்திர ஆர் பட்டேல் ஸ்வரூப் துதா சசிகுமார் ராமச்சந்திரன் பரணிடப்பட்டது 2023-02-24 at the வந்தவழி இயந்திரம்
2016 (5வது தேசிய புகைப்பட விருது) பவன் சிங் ஜாவேத் அகமது தர் ஹிமான்ஷு தாக்கூர்
2017 (6வது தேசிய புகைப்பட விருது) ரகு ராய் கே.கே.முஸ்தபா ரவீந்தர் குமார்
2018 (7வது தேசிய புகைப்பட விருது) அசோக் தில்வாலி எஸ்.எல்.சாந்த் குமார் குர்தீப் திமான் [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "புகைப்பட பிரிவு 8வது தேசிய புகைப்பட விருதுகளை அறிவித்துள்ளது".
  2. "Govt felicitates photographers at National Photography Awards". Outlook. 19 February 2019. https://www.outlookindia.com/newsscroll/govt-felicitates-photographers-at-national-photography-awards/1481724.