விக்ரம்-எசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்ரம்-எசு
Vikram-S
[[Image:
|270px|]]
தரவுகள்
இயக்கம் சிறிய இரக ஏவூர்தி
அமைப்பு இசுகைரூட்டு
நாடு இந்தியா
அளவு
உயரம் விக்ரம் எசு: 20 m (66 அடி)
விட்டம் 0.37 m (1 அடி 3 அங்)
நிறை 545 kg (1,202 lb)
படிகள் 1
Associated Rockets
Comparable ரோகிணி குடும்பம்
ஏவு வரலாறு
நிலை அறியப்படவில்லை
ஏவல் பகுதி சத்தீசு தவான் விண்வெளி மையம்
மொத்த ஏவல்கள் 1
வெற்றிகள் 1
முதல் பயணம் 18 நவம்பர் 2022
நிலை (விக்ரம் எசு)
பொறிகள் கலாம் 80
உந்துகை 70 kN (16,000 lbf)
எரிபொருள் திண்மம்

விக்ரம்-எசு (Vikram-S) என்பது இந்தியாவின் முதல் தனியார் இராக்கெட் ஆகும்..[1][2] 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு ஏவுகலம் சிறீ அரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.[3][4] இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இராக்கெட்டை விண்ணில் ஏவும் பணியை மேற்கொண்டது. ஐதராபாத்தை தளமாகக் கொண்ட இசுகைரூட் தனியார் விண்வெளி தயாரிப்பு நிறுவனம் இராக்கெட்டை தயாரித்தது. இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் இராக்கெட் நிறுவனங்களின் பிரவேசத்தை குறிப்பதாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையாகக் கருதப்படும் விக்ரம் சாராபாய் நினைவாக இந்த இராக்கெட்டுக்கு விக்ரம்-எசு எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இராக்கெட் ஏவுதலுக்கான இப்பணிக்கு ஆரம்பம் என்ற பொருளைக் குறிக்கும் 'பிரரம்ப்' என்று பெயரிடப்பட்டுள்ளது.[5] பிரரம்ப் ஒரு செயல்விளக்கப் பணியாக இருந்தபோதும், நிறுவனத்தில் தனியார் விண்வெளித் துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். விக்ரம் ராக்கெட்டின் தொழில்நுட்பம், இயந்திரம் மற்றும் வடிவமைப்புகளை சரிபார்த்து, பூமியின் தாழ்வட்டச் சுற்றுப்பாதையில் அதிக எடையுள்ள இராக்கெட்டுகளை செலுத்தும் திறன் கொண்டதாகும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "விக்ரம் எஸ், ஸ்கைரூட்: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் - என்னென்ன சிறப்புகள்?". BBC News தமிழ். 2022-11-16. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  2. "Vikram-S launch Highlight | Skyroot aces maiden launch of India's first privately made rocket". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-19.
  3. "Vikram-S rocket launch Live Updates: India’s first private rocket blasts off successfully" (in en). The Indian Express. 18 November 2022. https://indianexpress.com/article/technology/science/isro-vikram-s-rocket-launch-live-updates-8275214/. 
  4. Kandavel, Sangeetha (18 November 2022). "Vikram-S, India’s first private rocket, lifts off from ISRO spaceport" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sci-tech/vikram-s-indias-first-private-rocket-lifts-off-from-isro-spaceport/article66152534.ece. 
  5. "India's first privately built rocket, Vikram-S, launched by ISRO" (in en). Hindustan Times. 18 November 2022. https://www.hindustantimes.com/india-news/indias-first-privately-built-rocket-vikram-s-set-to-be-launched-by-isro-101668748739442.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்-எசு&oldid=3756061" இலிருந்து மீள்விக்கப்பட்டது