ரோ எதிர் வேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரோ எதிர் வேட் (Roe v. Wade, 410 U.S. 113 (1973),[1] என்பது அமெரிக்க உச்ச நீதிமன்றம் அமெரிக்க அரசியலமைப்பு கருவுற்ற பெண்கள் அரசின் தடையின்றி கருவைக் கலைக்க அனுமதித்துள்ளது என்ற தீர்ப்பை அளித்ததை குறிக்கும். இத்தீர்ப்பு, கருவைக் கலைக்க கூடாது என்ற நடுவண், மாநில அரசுகளின் சட்டங்களை செல்லாதாக்கியது.[2][3] சேன் ரோ என்ற சட்ட புனைப்பெயரை உடைய நார்மன் மெக்கார்வே 1969ஆம் ஆண்டு மூன்றாவது குழந்தைக்கு கருவுற்றார். அக்கருவை கலைக்க விரும்பினார், ஆனால் அவர் வசித்த தெக்சாசில் கருக்கலைப்பு சட்டத்திற்கு புறம்பானது. இச்சட்டத்தை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தெக்சாசு சார்பில் அம்மாவட்ட அரசு வழக்கறிஞர் கென்றி வேட் வாதிட்டார். மூன்று நீதிபதிகள் உள்ள அமர்வு ரோவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. தெக்சாசு மாநிலம் இத்தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

சனவரி 1973இல் உச்ச நீதிமன்றத்தில் விசாரித்த ஒன்பது பேரில் ஏழு பேர் ரோவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். அரசியலமைப்பின் பதினான்காவது திருத்தம் தனிநபருக்குத் தனியுரிமையை வழங்குவதால் அது எச்சமயத்தில் கருவைக் கலைக்கலாம் என்ற உரிமையை கருவுற்ற பெண்ணுக்கு வழங்குகிறது என்றனர். இந்த உரிமையானது முழுமையானது அல்ல என்றும் அரசு பெண்களின் உடல் நலனிலும் பேறு காலத்திற்கு முந்தைய நலனிலும் அக்கறையுடன் இருப்பதுடன் சமப்படுத்தி செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தியது.[4][5]

'ரோ' வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமெரிக்க வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாகும்.[6][7] சட்ட சமூகத்தில் உள்ள சிலரால் "ரோ" கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.[7] மேலும் சிலர் இந்த முடிவை நீதித்துறை செயல்பாட்டின் ஒரு வடிவமாக அழைத்தனர்.[8] கருக்கலைப்புக்கு எதிரான அரசியல்வாதிகளும், ஆர்வலர்களும் பல தசாப்தங்களாக இம்முடிவை முறியடிக்க முயன்றனர். 2022 சூன் 24 அன்று, அமெரிக்க உச்ச நீதிமன்றம் "டொப்சு எதிர் ஜாக்சன் மகளிர் சுகாதார அமைப்பு" வழக்கில் "ரோ"வை ரத்து செய்தது..[9][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 410 U.S. 113 (1973).
  2. Mears, William; Franken, Bob (January 22, 2003). "30 years after ruling, ambiguity, anxiety surround abortion debate". CNN. http://www.cnn.com/2003/LAW/01/21/roevwade.overview/. "In all, the Roe and Doe rulings impacted laws in 46 states." 
  3. Greenhouse 2005, ப. 72
  4. Nowak & Rotunda (2012), § 18.29(a)(i).
  5. Chemerinsky (2019), § 10.3.3.1, p. 887.
  6. (Chemerinsky 2019, § 10.3.3.1, p. 886): "Few decisions in Supreme Court history have provoked the intense controversy that has surrounded the abortion rulings."
  7. 7.0 7.1 Dworkin, Roger (1996). Limits: The Role of the Law in Bioethical Decision Making. Indiana University Press. பக். 28–36. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0253330758. https://archive.org/details/limitsroleoflawi0000dwor_f6c1. 
  8. Greenhouse 2005, ப. 135–136
  9. Breuninger, Kevin; Mangan, Dan (June 24, 2022). "Supreme Court overturns Roe v. Wade, ending 50 years of federal abortion rights". CNBC. பார்க்கப்பட்ட நாள் June 27, 2022.
  10. "The Dobbs v. Jackson Decision, Annotated". The New York Times. June 24, 2022. https://www.nytimes.com/interactive/2022/06/24/us/politics/supreme-court-dobbs-jackson-analysis-roe-wade.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோ_எதிர்_வேட்&oldid=3583655" இலிருந்து மீள்விக்கப்பட்டது