கோக்பெர்க் திமிர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோக்பெர்க் திமிர்சி
பிறப்பு20 அக்டோபர் 1989 (1989-10-20) (அகவை 34)
இசுமீர், துருக்கி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2012–இன்று வரை

கோக்பெர்க் திமிர்சி (Gökberk Demirci) (பிறப்பு: 20 அக்டோபர் 1989) என்பவர் துருக்கிய நாட்டு தொலைக்காட்சி நடிகர் ஆவார்.[1] இவர் துருக்கியில் உள்ள செங்கிஸ் கோகாய்வாஸ் தியேட்டர் என்ற நடிப்பு கல்லூரியில் நடிப்புக் கலை சார்ந்த படிப்பை பயின்று விட்டு 2012 ஆம் ஆண்டு 'பிர் ஜமான்லர் ஒஸ்மான்லி: கியம்' என்ற தொடர் மூலம் தொலைக்காட்சித் துறையில் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஒஸ்மான்லாடா டெரின் டெவ்லே (2013), ஹயதமன் அஸ்கி (2017), அடேனி சென் கோய் (2018) மற்றும் அர்கா சோகக்லர் (2018) போன்ற தொடர்களில் சிறு வேடங்களில் நடித்தார். இவர் டெமிர் அட்லே கிரிங்கோ (2015) மற்றும் யிலடிசர் காயர் (2017) போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு கனால் 7 தொலைக்காட்சி தயாரிப்பில் யெமின்[2][3] என்ற தொடரில் எமிர் என்ற கதாபாத்திரம் மூலம் கதாநாயகனாக நடித்தார். இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த 2 மற்றும் 3 ஆம் பருவங்களிலும் இவரே கதாநாயகனாக நடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோக்பெர்க்_திமிர்சி&oldid=3236031" இலிருந்து மீள்விக்கப்பட்டது