எல்லிப்டோசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரபுவழி நீள்வட்டச் செல்லிய நோயாளிகளின் இரத்தப் படலத்தில் 60% முதல் 70% சதவீதம் வரை காணப்படும் எல்லிப்டோசைட்டுகள் காணப்படுகின்றன.

எல்லிப்டோசைட்டுகள் (Elliptocytes) என்பவை அசாதாரணமான வடிவங்கொண்ட இரத்தச் சிவப்பு அணுக்களைக் குறிக்கின்றன. இவை ஒவலோசைட்டுகள் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன. முட்டை வடிவம் முதல் தடி அல்லது பென்சில் வடிவம் வரையிலான நீள்வட்டம் முதல் நீள்வடிவங்களில் இவை காணப்படுகின்றனா. இரத்தநிறமியான ஈமோகுளோபின் இந்நீள்வடிவ செல்களின் முனைகளில் குவிந்து அடர்த்தியாகவும் நடுப்பகுதியில் சாதாரண வெளிர் நிறமும் கொண்டுள்ளதை ஒளிநுண்ணோக்கி மூலம் உற்றுநோக்கும்போது காணமுடிகிறது. அரிவாள் செல்கள் போல கூர்மையாக இல்லாமல் இச்செல்களின் விளிம்புகள் வளைந்து காணப்படுகின்றன. [1]

கண்ணாடித் தகட்டின் மீது பூசப்பட்ட இரத்த மாதிரியில் 1% எல்லிப்டோசைட்டுகள் காணப்படுவது சாதாரண நிலையாகும்.

அசாதாரண இந்த சிவப்பு இரத்த அணுக்கள் கீழ்கண்ட இரத்தக் கோளாறுகள் உள்ள நோயாளிகளின் இரத்தப் படலங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன: [2]

  • மரபுவழி நீள்வட்டச் செல்லியம்
  • தென்கிழக்கு ஆசிய நீள்வட்டச் செல்லியம்
  • தலசீமியா எனப்படும் இரத்த அழிவுச்சோகை
  • இரத்த இரும்புக் குறைபாடு
  • பிறவி நரம்புக் குழலிணைவுப் பிறழ்வு நோய்த்தொகை
  • மைலோபைப்ரோசிசு எனப்படும் எலும்புமச்சை புற்றுநோய்
  • முதிரா சிவப்பணு இரத்தச்சோகை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ovalocytes/Elliptocytes - LabCE.com, Laboratory Continuing Education". www.labce.com. பார்க்கப்பட்ட நாள் 21 May 2018.
  2. Hirschmann, editors, Douglas C. Tkachuk, Jan V. (2007). Wintrobe's atlas of clinical hematology. Philadelphia, PA [etc.]: Lippincott Williams & Wilkins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0781770231. {{cite book}}: |first1= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லிப்டோசைட்டு&oldid=2990893" இலிருந்து மீள்விக்கப்பட்டது