அருட்கவி அழகு முத்துப் புலவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருட்கவி அழகு முத்துப் புலவர்
பிறப்புநாகப்பட்டினம்
தமிழ்நாடு
இந்தியா
தலைப்புகள்/விருதுகள்தமிழ்ப் புலவர்
தத்துவம்சைவ சமயம்

அருட்கவி அழகு முத்துப் புலவர் நாகை நீலா வடக்கு வீதியில் சேனைக்குடையார் மரபினை சேர்ந்த அம்பலவாணச் செட்டியாரும் அவர்தம் மனைவி சிவகாமசுந்தரி அம்மையாரும் செய்த அருந்தவப் பயனாய் புத்திரராகப் பிறந்தவர் அழகுமுத்து புலவர் .இவரை தொழுநோய் வாட்டியதால் உறவினர்களால் கைவிடப்பட்டார் .அழகுமுத்து அவர்கள் நாகைக் குமரன் கோயில் மெய்க்காவலராகத் திருப்பணி ஆற்றியவர்.ஒருநாள் பணியின்போது மயங்கி இருந்தவரை விட்டுவிட்டு கோவில் கதவை சாத்தினர். மயக்கம் தொழிந்து பசியால் வாடிய அழகு முத்து முருகா முருகா என்று அரற்றிக் கொண்டிருந்தவருக்கு முருகன் பரிசாகரன் வேடத்தில் வந்து கோவில் பிரசாதம் அளிக்க அதை உண்டவருக்கு தோழுநோய் தீர முருகன் மயில் மீது காட்சி கொடுத்து அருள். அழகு முத்து, வேலாயுத சதகம், மெய்கண்ட வேலாயுத உலா, காயாரோகணக் குறிஞ்சி போன்ற செய்யுள் தொகுப்பை பாடி ஆனந்தித்தார். அப்போதிருந்து முருகனுக்கு மெய்கண்ட மூர்த்தி எனப்பெயர்.

சிறப்புகள்[தொகு]

தலைசிறந்த சிவன் அடியார்களான அறுபத்த மூன்று நாயன்மார்களைப் போலவே, சேய்த் தொண்டர்கள் என்றழைக்கப்படும் எழுபத்து எட்டு முருக பக்தர்கள் உள்ளனர். அகத்தியர், அவ்வையார், அருணகிரியார் என்று தொடரும் அந்த வரிசையில் உள்ளோருள் ஒருவர்தான். இந்த 'அழகு முத்து நயனார்'

என்று புலவர் அழகு முத்துவைப் புகழ்கிறது சேய்த் தொண்டர் திருவந்தாதி

இயற்றிய நூல்கள்[தொகு]

'திறப்புகழ்',
'மெய்கண்ட வேலாயுத சதகம்',[1]
'மெய்கண்ட வேலாயுதக் குறவஞ்சி'

மறைவு[தொகு]

இவ்வருட் புலவர் தன் வாழ்நாள் இறுதியில் தலயாத்திரை பூண்டு சீர்காழியில் இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார். ஓர் சித்திரை மாத சதய நாள் அன்று மாலை வேளையில் திடுமென ஆவிநீத்து ஆண்டவன் அடியிணைகளை அடைந்தார். அதே வேளையில் நாகை மெய்கண்ட வேலவர் கோவிலின் உள்ளே அன்பர்கள் எல்லாம் பார்த்திருக்க புலவரவர்கள் பூத உடலோடு கந்தவேள் எழுந்தருளியுள்ள கரு அறையுள் நுழைந்ததாகவும் பின் காணவில்லை என்றும் கூறுவர்.இவ் அற்புத நிகழ்ச்சியைக் கண்டு அதிசயித்தோர் பின் புலவர் அவர்களுக்கு இக்கோவிலின் உள்ளே திருஉரு அமைத்து வழிபடுவாராயினர்.

உசாத்துணை[தொகு]

1)பக்கம்:நாகப்பட்டினம்.pdf/278 - விக்கிமூலம்

  1. https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ8kJhy&tag=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D#book1/.