உள்ளடக்கத்துக்குச் செல்

சேனைத்தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேனைத்தலைவர்
வகைப்பாடுபிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
மதங்கள்இந்து
மொழிகள்தமிழ்
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
தமிழகம்,புதுச்சேரி மற்றும் கேரளா
தொடர்புடைய குழுக்கள்வேளாளர்
குறிப்புகள்
குல தொழில்: வெற்றிலை கொடிக்கால் வேளாண்மை மற்றும் வெற்றிலை வணிகம்

சேனைத்தலைவர் (Senaithalaivar) (சேனைக்குடையார், சேனையார், சேனை முதலியார்)

எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் மத்திய மற்றும் தென் தமிழகத்தில் அதிகளவில் வசிக்கின்றனர்.[1]

வரலாறு

சேனைத்தலைவர் படைத்தலைவர்களாவும், நிலச்சுவான்தார்களாகவும், பண்ணையார்களாகவும், கொடிக்கால் வெற்றிலை வேளாண்மை செய்த இனமாகவும், வெற்றிலை வணிகர்களாகவும் இருந்துள்ளனர். இவர்களின் குல தொழில் கொடிக்கால் வெற்றிலை வேளாண்மை மற்றும் வெற்றிலை வணிகம் செய்வதாகவும் இருந்தது. சோழர் காலத்தில் பெரும் வணிகர்களாகவும், நானாதேசிகர் வணிக குழுவில் ஒரு குழுவாகவும் இருந்துள்ளனர். 2 ஆம் நூற்றாண்டில் அஞ்சான் புகலிடத்தின் பாதுகாவலர்களாக இருந்துள்ளனர்(துளு நாட்டு கல்வெட்டு). பாண்டியர் காலத்தில் இவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வெற்றிலை பயிருடுவதியே பரம்பரை பரம்பரையாக செய்து வந்த இவர்கள், இன்னும் தமிழ்நாட்டில் இன்றளவும் அத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொடிக்கால் பிள்ளைமார் என்று அழைக்கப்பட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொடிக்கால் மூப்பனார் என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்.

சேனைத்தலைவர் வணிகர்கள் அக்காலத்தில் செட்டியார் என்றே அழைக்கப்பட்டனர். தரங்கம்பாடி ஓலை ஆவணங்களில் இருந்து ஒப்பந்த கூலிகளை பராமரித்து பண்ணையம் செய்த நிலச்சுவான்தார்கள் செட்டியார் என்ற சாதி பட்டம் புனையும் இலைவாணியர் (சேனைக்குடையார்) இனத்தவராவார். வெற்றிலை கொடிக்கால் பயிர் இடுவோராக அறியப்படும் இவ்வினத்தவர்கள், சேனையங்காடியார் என்றும் சேனைக் குடியுடையார் அல்லது சேனைக் குடையார் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றனர்.[2]

சங்க காலங்களில் இருந்து இவ்வினத்தின் பெயர்கள் "சேனை" என்ற அடைமொழியுடன் அவர்கள் அக்காலங்களில் செய்யும் தொழிலுக்கு ஏற்ப சேனைக்கடையார், மூன்று கைமா சேனையார் , சேனையார், சேனை பெரு வாணிகன், சேனைக் குடியன், சேனை கொண்ட செட்டியார், சேனை அங்காடிகள், சேனைக்குடையார், இலைவாணியர், சேனைத்தலைவர் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளனர்.[3][4][5][6]

படைத்தலைவர்களாகவும், வணிகர்களின் பாதுகாவலர்களாகவும், கோயில்களின் பாதுகாவலர்களாகவும், அஞ்சான் புகலிடத்தின் பாதுகாவலர்களாகவும், சேனை வீரர்களாகவும் ,வணிகர்களாகவும், கொடிக்கால் சாகுபடி செய்பவர்களாகவும் இருந்து வந்துள்ளதால் "சேனை" என்ற அடைமொழியை சங்க காலத்தில் இருந்து தங்கள் இனத்தின் அடையாளமாக சேர்த்து கொண்டு, வீரமிக்க மற குழுவாக "சேனை" என்ற அடைமொழியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.[7] [8]

வாழும் பகுதிகள்

இவர்கள் தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்மலை, இராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், சேலம், காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, கும்பகோணம், போன்ற பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். [9][10]

கல்வெட்டுகளில் சேனைத்தலைவர்

சங்க காலங்களில் இருந்து நாயக்கர் காலம் வரை சேனைத்தலைவர் பல்வேறு கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளனர்.

 1. மூன்றுகை மாசேனை யார் [11][12]
 2. சேனையார்[12]
 3. சேனைக்கடையார்
 4. சேனைக்குடையார்
 5. சேனையங்காடிகள்
 6. சேனை கொண்ட செட்டியார்
 7. சேனை வாணிகன்
 8. இலைவாணிய பாட்டம் (வெற்றிலை வேளாண்மை செய்த சேனையார் அல்லது சேனையங்காடிகள் என்ற இன மக்களுக்கு மட்டும் சோழர் ,பாண்டிய காலங்களில் உள்ள வரியின் பெயர்)[13][14]

பட்டங்கள்

சேனைத்தலைவர் இன பட்டங்கள்:

 1. மூப்பனார்
 2. பிள்ளை
 3. முதலியார்
 4. செட்டியார்
 5. கொடிக்கால் மூப்பனார்
 6. இலைவாணியர்

இலைவாணியர்

இலைவாணிய சமூகம் ஒன்றுபட்ட வானியர் சமூகத்தின் உட்பிரிவாக கருதப்படுகிறது. இவர்கள் கொடிக்கால் வெற்றிலை வேளாண்மை செய்து அதனை வணிகம் செய்வதை குலதொழிலக கொண்டவர்கள் இவர்கள் பிரகலங்களில் தங்கள் பெயரை சேனைதலைவர் என்று மாற்றிக்கொண்டதாக கருதப்படுகிறது.[15][9]

தமிழர் வரலாறு[16][17],
மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்

சேனைத்தலைவர் புத்தகங்கள்

 • சேனைத்தலைவர் மரபு விளக்கம் - காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார்
 • வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அலல்து சேனைக்குடையார் பூர்வ சரித்திரம் - கோபால செட்டியார்
 • சேனைத்தலைவர் குல வரலாறு -  தக்ஷிணாமூர்த்தி
 • சேனைத்தலைவர் வாழ்வியல் - விவேகலதா

சேனைத்தலைவர் கல்வி நிலையங்கள்

 • சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி, சிவகிரி
 • சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி, சங்கரன் கோவில்
 • சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி, விக்கிரமசிங்கபுரம்
 • சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி, புளியங்குடி
 • சேனைத்தலைவர் மெட்ரிகுலசன் பள்ளி, போடிநாயக்கனூர்
 • சேனைத்தலைவர் கலைமகள் உயர்நிலைப்பள்ளி, ஈராச்சி
 • சேனையர் நாராயணசாமி ஆரம்பப்பள்ளி, திருவில்லிபுத்தூர்
 • சேனையர் மேல்நிலைப் பள்ளி, மேல்கடையநல்லூர்
 • சேனையர் தொழிற்பயிற்சிப்பள்ளி, குருக்கள்பட்டி

மேற்கோள்கள்

 1. State), Madras (India :; Baliga, B. S. (24 January 2020). "Madras District Gazetteers: Tirunelveli District ( 2 v.)". Printed by the Superintendent, Govt. Press – via Google Books.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
 2. "தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள்". www.tamildigitallibrary.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-25.
 3. Malarmannan, மலர்மன்னன் / (1 October 2012). "திராவிட இயக்கம் - புனைவும் உண்மையும் / Dravida Iyakkam - Punaivum Unmaiyum". Kizhakku Pathippagam – via Google Books.
 4. "தமிழ் மாமலை". www.tamildigitallibrary.in.
 5. Ramaswamy, Vijaya (24 January 1985). "Textiles and weavers in medieval South India". Oxford University Press – via Google Books.
 6. "வாணியன் Meaning in Tamilpulavar". tamilpulavar.org.[தொடர்பிழந்த இணைப்பு]
 7. [1]
 8. Kul̲u, Tamil̲nāṭṭu Varalār̲r̲uk (24 January 1998). "Tamiḷnāṭṭu varalāṟu: pts. 1-2. Cōḷap peruvēntar kālam". Tamil̲ Vaḷarcci Iyakkakam – via Google Books.
 9. 9.0 9.1 [2]
 10. [3][தொடர்பிழந்த இணைப்பு]
 11. Al̲akēcan̲, Ār Kē (24 January 2020). "Kalveṭṭukal kāṭṭum kalaiccor̲kaḷ: cōl̲ar kālam". Ti Pārkkar – via Google Books.
 12. 12.0 12.1 S.p.c.k. Press (24 January 2020). "Quarterly Journal Of The Mythic Society Vol.32" – via Internet Archive.
 13. Kul̲u, Tamil̲nāṭṭu Varalār̲r̲uk (24 January 1998). "Tamiḷnāṭṭu varalāṟu: pts. 1-2. Cōḷap peruvēntar kālam". Tamil̲ Vaḷarcci Iyakkakam – via Google Books.
 14. Cōmale (24 January 1980). "Maturai Māvaṭṭam". Kastūrpā Kānti Kan̲yā Kurukulam, Veḷiyīṭṭup Pakuti – via Google Books.
 15. Kumar Suresh Singh (2001). People of India, Volume 40, Part 3. Anthropological Survey of India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185938881.
 16. ":: TVU ::". www.tamilvu.org.
 17. Tēvanēyan̲, Ñānamuttan̲ (24 January 2020). "Tamil̲ar varalār̲u". Tamil̲maṇ Patippakam – via Google Books.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேனைத்தலைவர்&oldid=4046041" இலிருந்து மீள்விக்கப்பட்டது