பெக்கோட்டி மியூடாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெக்கோட்டி மியூடாய் (Peggoty Mutai) கென்ய நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். கென்யாவின் கெரிச்சோ நகரத்தில் பிறந்த இவரது ஆர்வங்கள் மருத்துவ வேதியியலின் பக்கம் இருந்தன. குறிப்பாக ஒட்டுண்ணிப் புழுக்களுக்கு எதிரான புதியவகை சிகிச்சை தேடலுடன் இவரது ஆர்வமும் இணைந்து செயல்பட்டன.

கென்யாவின் நைரோபி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று இவர் தனது இளம் அறிவியல் பட்டம் மற்றும் மருந்தியல் மற்றும் மருந்து பகுப்பாய்வியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக சேர்ந்த இவர் அதை தொடர கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டார் [1]. விஞ்ஞானத்தில் பெண்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும், அவர்கள் தங்கள் ஆராய்ச்சித் திட்டங்களைத் தொடர்வதற்கு அனைத்துலக உதவித் தொகையைப் பெறவேண்டுமென்ற நோக்கத்தோடும் வழங்கப்பட்டு வரும் எல் ஓரியல் யுனெசுக்கோ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து உறுப்பினர்களில் மியூட்டாயும் ஒருவராக இருந்தார் [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "FOCUS ON PEGGOTY MUTAI". Women who Mentor and Innovate in Africa. 3 October 2013. Archived from the original on 26 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 16 February 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "The 14th Annual L'ORÉAL-UNESCO Awards For Women in Science". UNESCO. 28 March 2012. பார்க்கப்பட்ட நாள் 16 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெக்கோட்டி_மியூடாய்&oldid=3860095" இலிருந்து மீள்விக்கப்பட்டது