இந்தோனேசிய தேசிய காட்சிக்கூடம், ஜகார்த்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோனேசிய தேசிய காட்சிக்கூடம்
Galeri Nasional Indonesia
இந்தோனேசிய தேசிய காட்சிக்கூடம், ஜகார்த்தா is located in ஜகார்த்தா
இந்தோனேசிய தேசிய காட்சிக்கூடம், ஜகார்த்தா
Location within ஜகார்த்தா
நிறுவப்பட்டதுமே 8, 1999
அமைவிடம்ஜல்.மெடான் மெர்டாகா தைமூர், 14, 10110, இந்தோனேசியா
ஆள்கூற்று6°10′43″S 106°50′00″E / 6.178529°S 106.833276°E / -6.178529; 106.833276
சேகரிப்பு அளவு1770 கலைப்பொருள்கள்
இயக்குனர்டுபாகஸ் அன்ட்ரே சுக்மானா(2005 முதல்)[1]
மேற்பார்வையாளர்எம்.அகஸ் பர்கான், இந்தா சி.நோயர்காடி, ரிஸ்கி ஏ. ஜீலானி, குஸ் இன்டார்டோ[1]
வலைத்தளம்www.galeri-nasional.or.id

இந்தோனேசிய தேசிய காட்சிக்கூடம் (National Gallery of Indonesia), இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் உள்ள ஒரு கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியகம் ஆகும்.

துவக்கம்[தொகு]

இந்தோனேசிய தேசியக் காட்சிக்கூடமானது காட்சி கலைத் துறையின் ஒரு கலாச்சார நிறுவனமாக மே 8, 1999 முதல் ஒரு இருந்து வருகிறது. இந்தோனேசியாவில் காட்சிக்கலையினை பாதுகாத்தல், மேம்படுத்துதல் மூலம் கலைப்படைப்புகள் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை விரிவாக்குவதில் இந்த காட்சிக்கூடம் முக்கிய பங்கு வகிக்கிறது.[2]

கல்வி வளாகம்[தொகு]

கார்பெண்டீர் ஆல்ட்டிங் ஸ்டிட்சிங்கின் லைசியம், தற்போது இந்தோனேசியாவின் தேசிய காட்சிக்கூடத்தின் கெதுங் பி.

இந்த வளாகம் படேவியா பகுதியில் கோனிங்ஸ்ப்ளீன் ஓஸ்ட் எண் 14 இல் அமைந்துள்ளது. முதன்மைக் கட்டடமான கெடுங் ஏ என்னும் கட்டடம் 1817 ஆம் ஆண்டில் ஜி.சி. வான் ரிஜ்க் என்பவரால் ஒரு டச்சு இந்திய காலனித்துவ பாணியில் இந்திஸ் வூன்ஹுயிஸ் (இண்டீஸ் குடியிருப்பு) என்ற நிலையில் கட்டப்பட்டது. கஸ்டீல் படேவியாவின் எச்சங்களிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு இதன் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது.[3]

1900 ஆம் ஆண்டில் இந்த வளாகமானது எச்.பி.எஸ்.கல்வி நிறுவனம் என்ற நிலையில் மாற்றப்பட்டது. அதற்கு கார்பெண்டீர் ஆல்ட்டிங் ஸ்டிட்சிங் (சி.ஏ.எஸ்) என்று பெயரிடப்பட்டது. டச்சு புராட்டஸ்டன்ட் ஆயர் மற்றும் புகழ் பெற்ற ஃப்ரீமேஸன் அல்பர்டஸ் சாமுவேல் கார்பெண்டீர் ஆல்ட்டிங் (1837-1915) அதிகாரத்தின் கீழ் செயல்பாட்டிற்கு வந்தது. முன்னாள் இண்டீஸ் குடியிருப்பு (கெதுங் ஏ) ஒரு பெண்கள் தங்குமிட கட்டிடமாக மாற்றி அமைக்கப்பட்டது. அதே நேரத்தில் பள்ளியின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் பல கட்டிடங்கள் சேர்க்கப்பட்டன: ஒரு லைசியம் அல்லது தொடக்கப்பள்ளி (1902, தற்போது தேசிய காட்சிக்கூடத்தின் கெதுங் பி); முலோ எனப்படுகின்ற இளநிலை உயர்நிலைப்பள்ளி; மற்றும் எச்.பி.எஸ். எனப்படும் முதுநிலை உயர்நிலைப்பள்ளி போன்றவை அவற்றில் உள்ளன.[4]

1945 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு, ஜகார்த்தாவின் மிகப் பெரிய வெள்ளை குடியேற்ற சமூகத்திற்கு சேவை செய்யும் நோக்கில் கார்பெண்டீர் ஆல்ட்டிங் ஸ்டிட்சிங் செயல்பட்டு வந்தது, இருந்தபோதிலும்இந்தோனேசிய அரசாங்கம் பள்ளியை அனைத்து இனங்களைச் சேர்ந்த மாணவர்களையும் அங்கு சேர்க்கும்படி கட்டாயப்படுத்தியது.

1955 ஆம் ஆண்டில், இந்தோனேசிய அரசாங்கம் டச்சு காலனித்துவ நிர்வாகத்துடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்தது. கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ரேடன் சலே அறக்கட்டளையின் அதிகாரத்தின் கீழ் கொணரப்பட்டது, இதில், கார்பெண்டீர் ஆல்ட்டிங் ஸ்டிட்சிங்கின் செயல்பாடுகள் அடங்கும். அது ஃப்ரீமேசனரியின் ஆதரவோடு செயல்பட்டது.[3]

சி.ஏ.எஸ் மாணவர்கள்.

1961 ஆம் ஆண்டில், அனைத்து டச்சு மாணவர்களும் சிஏஎஸ் ஆசிரியர்களும் இந்தோனேசிய அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்டன. அதே ஆண்டில் பள்ளி அகற்றப்பட்டது. மேலும் அதன் வளாகம் எஸ்டிஎன் 01 (மாநில தொடக்கப்பள்ளி எண் 1) மற்றும் செகோலா மெனெங்கா அட்டாஸ் 7, "மூத்த உயர்நிலைப்பள்ளி 7" ஆகவும் மாறியது.[4][5] 1962 ஆம் ஆண்டில், இராணுவ அதிகாரிகள் ஜனாதிபதி சுகர்னோவால் கையெழுத்திட்ட ஒரு இறுதிக்கடிதத்தை வெளியிட்டனர், இது இந்தோனேசியாவில் ஃப்ரீமேசனரிக்கு தடை விதித்தது. இதன் விளைவாக, ரேடன் சலே அறக்கட்டளை கலைக்கப்பட்டது, இந்த பள்ளி இந்தோனேசியா குடியரசின் கல்வி மற்றும் கலாச்சாரத் துறையால் கையகப்படுத்தப்பட்டது.[3]

1965 ஆம் ஆண்டில், செப்டம்பர் 30 நாளின் சம்பவத்திற்குப் பிறகு இருந்த உயர் பாதுகாப்பு அச்சுறுத்தலின் போது, முதன்மைக் கட்டடம் இளைஞர் மற்றும் மாணவர் கட்டளைப் பிரிவின் ( கோமண்டோ கெசாட்டுவான் பெமுடா டான் பெலாஜர் இந்தோனேசியா அல்லது கேபிபிஐ) தலைமையகமாக பிரதான கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. இதுதான் இந்தோனேசிய கம்யூனிஸ்ட்டைக் கலைக்கக் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.[3]

பாதுகாப்பு நிலைமை மேம்பட்ட பின்னர் இந்த கட்டிடம்இந்தோனேசிய இராணுவத்தால் (டென்டரா நேஷனல் இந்தோனேசியா அங்கட்டான் தாரத் அல்லது டி.என்.ஐ /ஏ.டி.), ஜெயசக்தி காலாட்படை படையணியின் தலைமையகமாக ஜகார்த்த ராய வி (கோமண்டோ டேரா மிலிட்டர் வி ஜகார்த்தா ராயா: கோடம் ஜெயா) இராணுவ கட்டளையின் கீழ் பயன்படுத்தப்பட்டது.[3]

1981 ஆம் ஆண்டில், இராணுவத் தளபதி (கெபாலா ஸ்டாஃப் அங்கட்டான் தாரத் அல்லது கே.எஸ்.ஏ.டி) அனுப்பிய 51/1978/1981 என்ற எண்ணிடப்பட்ட ஒரு தந்தியின் அடிப்படையிலும், ஜகார்த்தா ராயா வி ராணுவ கட்டளையின் இறுதிக்கடிதம் எண் எஸ்.கே.ஐ.பி / 194/1982இன் படியும் முதன்மைக் கட்டடமானது கல்வி மற்றும் கலாச்சாரத் துறையின் நிர்வாகத்தின்கீழ் வந்தது. பின்னர், பிப்ரவரி 28, 1982 தேதியிட்ட கல்வி மற்றும் கலாச்சார செயலாளர் பொது முடிவு கடிதம் எண் 126 / எஃப் / 1982 இன் அடிப்படையில், அதன் நிர்வாகம் மேலாண்மை கலாச்சார இயக்குநர் ஜெனரல் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த மைய கட்டிடம் (கட்டிடம் ஏ) ஒரு கண்காட்சி கட்டிடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அது இந்தோனேசியா தேசிய காட்சிக்கூடத்தின் முதன்மைக் கட்டடமாகத் திகழ்கிறது.

சேகரிப்புகள்[தொகு]

தற்போது இந்த அருங்காட்சியகத்தில் இந்தோனேசிய மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் 1770 கலைப்படைப்புகள் உள்ளன, அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இந்தோனேசிய கலைஞர்களான ராடென் சலே, அஃபாண்டி, பசுகி அப்துல்லா, மற்றும் சில வெளிநாட்டு கலைஞர்களான வாஸ்லி காண்டின்ஸ்கி, ஹான்ஸ் ஹார்ட்டுங், விக்டர் வசரேலி, சோனியா டெலவுனே, பியர் சோலேஜஸ் மற்றும் ஜாவோ வூ கி ஆகியோர் ஆவர். .

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Head of Gallery and Organization Chart". Galeri Nasional. April 4, 2009. பார்க்கப்பட்ட நாள் January 31, 2013.
  2. "Galeri Nasional – About Gallery". Galeri Nasional. April 4, 2009. பார்க்கப்பட்ட நாள் January 31, 2013.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "History of Indonesia National Gallery Building". Galeri Nasional. April 4, 2009. பார்க்கப்பட்ட நாள் January 31, 2013.
  4. 4.0 4.1 Tineke Nauta-Meertens (30 June 1997). "CAS historie". Stichting CAS-Reünisten. Stichting CAS-Reünisten. Archived from the original on 2 April 2011. பார்க்கப்பட்ட நாள் May 11, 2011.
  5. Antique photos from colonial times – Asia Finest Discussion Forum. Asiafinest.com. Retrieved July 7, 2011.