அகஸ்டின் ஜெபக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தே. அகஸ்டின் ஜெபக்குமார்
பிறப்பு (1947-08-20)ஆகத்து 20, 1947
இந்தியா சாயர்புரம், தமிழ்நாடு
பணி கிறித்தவ மறைபரப்புனர்
துணை திருமதி.ரூபலேகா

தே. அகஸ்டின் ஜெபக்குமார் (ஆகஸ்ட் 20, 1947) (சாயர்புரம், தமிழ்நாடு) ஜெம்ஸ் நிறுவனத்தின் அமைப்பாளரும், இந்தியாவின் முன்னனி கிறிஸ்தவ மறைபரப்புனருமாவார். இவர் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், இந்தியாவிலும், உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கிறிஸ்தவ மதபிரசாரம் செய்தவர் ஆவார். [1]

இளமைப்பருவம்[தொகு]

தேவபிச்சை, ஜாய் பிளாரினாள் தம்பதிகளுக்கு ஒரே ஆண் மகனாக தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் அகஸ்டின் ஜெபக்குமார் பிறந்தார். இவரது தந்தை ஒரு ராணுவ வீரராக இருந்து தபால் துறையில் பணியாற்றியவர் ஆவர். இவரது தாய் ஜாய் அவர்கள் ஆசிரியையாக பணியாற்றினார்.

இயேசுவை ஏற்றல்[தொகு]

இவர் பெற்றோரின் வளர்ப்பினாலும் கண்டிப்பினாலும் கிறிஸ்தவராய் இருந்த போதிலும், கிறிஸ்தவ சபைகளின் ஜெபக்கூட்டங்களிலும் ஆலயங்களிலும் கலந்து கொண்டவராய் இருப்பினும், வாலிபராயிருந்த போது உள்ளத்தில் ஒரு வெறுமையே நிறைந்து காணப்பட்டது. தனது 21வது வயதில், தனது அறையில் சமாதானம் இல்லாத நிலையில் முழங்காற்படியிட்டு இயேசுவை வணங்கத் தொடங்கினார். அந்த நாளிலே இயேசுவின் சிலுவையில் அறையப்பட்ட காட்சியைக் கண்டு இயேசுவிற்கு தனது வாழ்க்கையை முழுமையாக ஒப்புக் கொடுத்தார்.

கிறஸ்தவ இறைப்பணியில்[தொகு]

ஆங்கில இலத்திரனியல் கோ (ENGLISH ELECTRIC CO ) என்ற நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த இவர் தனது வேலையை நிறுத்தி விட்டு, மிசனேரிகளின் கல்லறை என்று அழைக்கப்படும் பீகார் மாநிலத்திற்கு சென்று தனது இறைவனின் அழைப்பிற்கு ஒப்புக்கொடுத்து அக்டோபர் 19ம் நாள் 1972ம் ஆண்டு முதல் [2] இறைபணியில் மட்டும் அல்லாமால் அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையில் பல சமுதாயப் பணிகளையும் செய்து வருகின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "அகஸ்டின் ஜெபக்குமார்".
  2. "History-GEMS".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகஸ்டின்_ஜெபக்குமார்&oldid=3812070" இலிருந்து மீள்விக்கப்பட்டது