யூனா கோல்மய்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூனா கோல்மய்யர்
Juna Kollmeier
பணியிடங்கள்கார்னிகி அறிவியல் நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்ஓகியோ அரசு பல்கலைக்கழகம்
கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்
ஆய்வேடுபால்வெளியிடை ஊடகம்: உட்கவர்தலும் உமிழ்தலும் குலைதலும் (2006)
ஆய்வு நெறியாளர்டேவிடு எச். வியன்பர்கு

யூனா கோல்மய்யர் (Juna Kollmeier) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் இப்போது கார்னிகி அறிவியல் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் 2020 இல் தொடங்கவுள்ள சுலோவான் இலக்கவியல் வானளக்கையின் ஐந்தாம் கட்ட இயக்குநராக உள்ளார்[1].

இளமையும் கல்வியும்[தொகு]

ஒரு கோடைப் பட்டறை வகுப்பில் விண்மீகளின் வகைபாடு பற்றிய உரையை கேட்பதற்கு முன் இவர் சட்டவியல் படித்து வழக்கறிஞராக விருப்பம் கொண்டிருந்தார்.[2] இவர் தன் இயற்பியல் இளவல் பட்டத்தைக் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் 2000 இல் பெற்றார்.[3] இவ்ர் பால்வெளியிடை ஊடகம் பற்றி முனைவர் பட்டம் பெற ஓகியோ அரசு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இவர் தன் முனைவர் பட்டத்தை 2006 இல் பெற்றார்.[3][4]

ஆராய்ச்சியும் பணியும்[தொகு]

இவரது ஆய்வு புடவியின் கட்டமைப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்துகிறது.[5] இவர் தொடக்கநிலைப் புடவியின் பாழ்நிலை அலைவுகளில் இருந்து கருந்துளைகளும் பால்வெளிகளும் எப்படி உருவாகின்றன என அறிய, அண்டவியல், நீர்ம இயங்கியல் ஒப்புருவாக்கங்களையும் பகுப்பாய்வுக் கோட்பாட்டையும் பயன்படுத்துகிறார்.[4] இவற்றை ஆய, இவர் பால்வெளியிடை ஊடகம், பால்வழி, மீப்பொருண்மைக் கருந்துளைகள் ஆகிய களங்களைப் பயன்படுத்துகிறார்.[4]

ஓகியோ அரசு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் முடித்ததும் இவர் அபுள் ஆய்வு மாணவராகவும் கார்னிகி பிரின்சுடன் ஆய்வு மாணவராகவும் இருந்தார்.[6] இவர் 2008 இல் கார்னிகி அறிவியல் நிறுவனத்தில் சேர்ந்தார்.[7] இவர் 2014 இல் ஒளியன் குறைவாக்க நெருக்க்டி குறித்து அற்வித்தார் இந்நெருக்கடி மின்னணுவாக்க நீரக வளிம்ம், பால்வெளியிடை ஊடக நீரகம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள ஒளியன் அளவுப் பற்றாக்குறையால் ஏற்படுவதாகும்.[8][9][10][11][12]

இவர் 2015 இல் உயராய்வு நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியராக இருந்தார்.[13] இப்போது இவர் கார்னிகி வான்காணகங்களின் ஆய்வாளராக உள்ளார்.[14] இங்கு இவர் அழைப்பின்பேரில் அடிக்கடி உரையாற்றுகிறார்.[5][15] இவர் சுலோவான் இலக்க்கவியல் வானளக்கைத் திட்டத்துக்கு தலைமையேற்பார் என அறிவிக்கப்பட்டது.[7][16]

இவர் "மதிநுட்பர்" என்ற பி. பி. எசு. ஆவணத்தில் தோன்றினார் "Genius".[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "juna kollmeier". SDSS. பார்க்கப்பட்ட நாள் 29 July 2018.
  2. "Meet the Woman Who Wants to Solve the Universe’s Mysteries". http://www.nationalgeographic.com.au/people/meet-the-woman-who-wants-to-solve-the-universes-mysteries.aspx. 
  3. 3.0 3.1 "Juna Kollmeier | Simons Foundation". www.simonsfoundation.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-20.
  4. 4.0 4.1 4.2 Science, Carnegie. "Juna Kollmeier | Carnegie Institution for Science". carnegiescience.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-20.
  5. 5.0 5.1 Carnegie Science (2015-06-05), At the Edge of Reason: The Black Holes in the Universe, பார்க்கப்பட்ட நாள் 2018-04-20
  6. 6.0 6.1 "Juna Kollmeier | Meet the Experts | Genius by Stephen Hawking". Juna Kollmeier | Meet the Experts | Genius by Stephen Hawking. பார்க்கப்பட்ட நாள் 2018-04-20.
  7. 7.0 7.1 "Juna Kollmeier | The Kavli Institute for Astronomy and Astrophysics at Peking University (KIAA-PKU)". kiaa.pku.edu.cn (in ஆங்கிலம்). Archived from the original on 2018-04-21. பார்க்கப்பட்ட நாள் 2018-04-20.
  8. Kollmeier, Juna A.; Weinberg, David H.; Oppenheimer, Benjamin D.; Haardt, Francesco; Katz, Neal; Davé, Romeel A.; Fardal, Mark; Madau, Piero et al. (2014-06-25). "The Photon Underproduction Crisis". The Astrophysical Journal 789 (2): L32. doi:10.1088/2041-8205/789/2/L32. பன்னாட்டுத் தர தொடர் எண்:2041-8205. Bibcode: 2014ApJ...789L..32K. 
  9. Rodgers, Paul. "An Intergalactic Light That Shines Too Bright" (in en). Forbes. https://www.forbes.com/sites/paulrodgers/2014/07/11/an-intergalactic-light-that-shines-too-bright/#32ad63d95b8c. 
  10. "Strange dark stuff is making the universe too bright" (in en-US). New Scientist. https://www.newscientist.com/article/mg22329782-700-strange-dark-stuff-is-making-the-universe-too-bright/. 
  11. "Cosmic accounting reveals missing light crisis". https://phys.org/news/2014-07-cosmic-accounting-reveals-crisis.html. 
  12. redOrbit (2017-09-15). "Researcher puts his own body on the line to test eel’s shock power - Redorbit" (in en-US). Redorbit. http://www.redorbit.com/news/science/1113418734/researcher-puts-his-own-body-on-the-line-to-test-eels-shock-power/. 
  13. "Juna Kollmeier" (in en). Institute for Advanced Study. https://www.ias.edu/scholars/juna-kollmeier. 
  14. "The Carnegie Observatories". obs.carnegiescience.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-20.
  15. AstronomyHeidelberg (2015-11-03), Juna Kollmeier: The Nature of the IGM and the Photon Underproduction Crisis, பார்க்கப்பட்ட நாள் 2018-04-20
  16. "Astrophysical Research Consortium". sloan.org. பார்க்கப்பட்ட நாள் 2018-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூனா_கோல்மய்யர்&oldid=3569338" இலிருந்து மீள்விக்கப்பட்டது