சமாதான நீதவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமாதான் நீதவான் என்பது ஒரு பதவியாகும். பொதுமக்களின் தேவைகளை விரைவுபடுத்தவும், இலகுபடுத்தவும் ஏற்படுத்தப்பட்ட பதவியாகும். இப் பதவியில் வகிப்பவர்களுக்கு வேதனம் வழங்கப்படுவதில்லை. சேவை கருதிய கெளரவ அந்தஸ்து கிடைக்கப்பெறுகின்றது.[1][2][3]

தொடக்கம்[தொகு]

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது மக்களிடைேய பிரித்தானிய அரசின் கொள்கைகளை அமுல்ப்படுத்தவும், மக்களிடையே சமாதானத்தை நிலைபெறச் செய்யவுமே முதலில் இப்பதவி உருவாக்கப்பட்டது. குறிப்பாக, முதலாம் ரிச்சார்ட் மன்னனின் காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சமாதானத்தின் காவலர்கள் என்றே இப் பதவி குறிப்பிடப்பட்டது.

மூன்றாம் எட்வார்ட் மன்னனின் காலப்பகுதியில் இப் பதவி வகித்தவர்களுக்கு சற்று அதிகாரமும் வழங்கப் பெற்ற நிலையில் சமாதான நீதவான் என்ற பதவிப் பெயரும் வழங்கப்படலாயிற்று.

இலங்கை[தொகு]

இப் பதவி பெறுவதற்கு குறைந்தபட்சம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்ற நியதி காணப்படுகின்றது. இப் பதவியானது கெளரவம் மிக்க பதவி என்பதாலும், சமூகத்தில் சட்டரீதியான அங்கீகாரத்தை உடைய பதவி என்பதாலும் பல்வேறு பொறுப்புக்கள் காணப்படுகின்றன. Eg: கையொப்பத்தை உறுதிப்படுத்தல், ஆவணங்களைச் சான்றுபடுத்தல், சமூக அநீதிகளை இனங்காணவும் காவல்துறை, சட்டத்துறைக்கு உதவுதலும், குற்றச்செயல்களைத் தடுக்க உதவுதல் போன்றன பல இப்பதவிக்குரிய கடமைகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Charles Austin Beard (1904). The Office of Justice of the Peace in England in Its Origin and Development. Columbia University Press. https://archive.org/details/officeofjusticeo02bearuoft. 
  2.   "Conservator". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 6. (1911). Cambridge University Press. 
  3. "Justices of the Peace Act 1361". Opsi.gov.uk. Archived from the original on 16 April 2009. பார்க்கப்பட்ட நாள் 17 October 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாதான_நீதவான்&oldid=3893824" இலிருந்து மீள்விக்கப்பட்டது