ஏற்காட்டின் கல்வியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏற்காட்டின் கல்வியகம் (Education of Yercaud) என்பது, ஏர்க்காட்டிலுள்ள கல்விச் சாலைகளைக் குறிக்கிறது. தொடக்கக் காலத்தில், இங்குள்ள பள்ளிக் கூடங்களெல்லாம், கிருத்தவர்களாலேயே நடத்தப்பட்டன/இன்றளவும் நடத்தப் படுகின்றன. இவை முதன் முதலில் ஏற்காட்டிலும், சேலத்திலும் வாழ்ந்த ஆங்கிலயே பணியாளர்களுக்காக ஏற்படு்த்தப் பட்டன. அவற்றில் இன்றளவும் சிறந்து விளங்குவது கீ்ழ்காணும் பள்ளிக் கூடங்களே ஆகும்.

மான்ஃபோர்ட் உயர்நிலைப் பள்ளி[தொகு]

மான்ஃபோர்ட் தேவாலயம்

ஏர்க்காடு உந்துவண்டி நிலையத்திலிருந்து, சிறிது தூரம் சென்றால், மான்ஃபோர்ட் உயர்நிலைப் பள்ளி பெருமிதமான தோற்றத்தோடு நம் கண்களில் தென் படும். சிறிய ஏரியின் பக்கமாக, நேர் கிழக்கில், இது அமைந்துள்ளது. ஏர்க்காட்டில் தோட்ட முதலாளிகளாக விளங்கிய ஆங்கிலோ இந்தியர்களின் குழந்தைகளுக்கு, மேலைநாட்டு முறையில் ஒரு கல்விக்கூடம் தேவைப் பட்டது. திருவாளர் ஏஜீன் (Br. Eugene) என்ற கத்தோலிக்கப் பாதிரியார், கி. பி. 1917-இல் இப் பள்ளியைத் துவக்கினர். [1]துவக்கும்போது ஏழுமாணவர்களே சேர்ந்தனர். ஆனல் தற்போது ஏறக்குறைய 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இதில் கல்வி பயில்கின்றனர். இவர்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள், தங்கிப் பயிலும் மாணவர்கள் (Boarders) ஆவர். பிறர், வெளியிலிருந்துவந்து பயில்வோர் (Day students). இப்பள்ளி இப்பொழுது புனித கிப்ரியல் திருச்சபையாரால் நடத்தப்படுகிறது. சிறந்த ஆங்கிலப் பயிற்சியும், கலைப் பயிற்சியும், இங்கு அளிக்கப்படுகின்றன. இராக், சையாம், கேரளம், இலங்கை, மலேயா, முதலிய நாடுகளிலிருந்தும், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், மாணவர்கள் இங்குவந்து கல்வி கற்கின்றனர்.

புனித இதய மகளிர் உயர்நிலைப் பள்ளி[தொகு]

புனித இதய மகளிர் தேவாலயம்

புனித இதய மகளிர் உயர்நிலைப்பள்ளி (Sacred Heart Girls High School) சூசையப்பர் கன்னியரால் நடத்தப்படுகிறது. இப்பள்ளியானது, கி. பி. 1894-ஆம் ஆண்டு திருவாட்டி வால்டரால் (Mother Valderbert), துவக்கப்பட்டது. இதிலும் ஏறக்குறைய 300 மாணவி யர் கல்வி பயிலுகின்றனர். இதில் குழந்தைகளுக் கான கிண்டர் கார்டன் பள்ளியும் உள்ளது. இதில் மேலைநாட்டு இசை நடனக் கலைகளும் தொழிற்கல்வியும் கூடக் கற்றுக் கொடுக்கின்றனர்.

பிறகலைக் கூடங்கள்[தொகு]

புனித மேரி திருச்சபையாரால், கிருத்தவக் கன்னியருக்காக நடத்தப்படும், இரண்டு பள்ளிகளும் உள்ளன. கோடைக் காலங்களில் கன்னியர் வந்து, தங்கும் குறிஞ்சிமனையாக, இவைகள் பெரிதும் விளங்குகின்றன. கிருத்தவ ஆடவர்க்குச் சமயக்கல்வி பயிற்றும் ஒரு பள்ளியும் இங்கு உள்ளது.

நாய் பங்களா கல்வியகம்[தொகு]

ஏர்க்காட்டில் சிறப்பாகப் பேசப் படுவனவற்றுள் நாய் பங்களாவும் ஒன்று. பெரிய ஏரிக்கு, இடதுபுறமாக நாகலூர் செல்லும் வழியில் இது உள்ளது. பாதையில் செல்லும போதே நாய்கள் குரைக்கும் ஒலி நம்மை அச்சுறுத்தும். அப்பங்களாவின் உரிமையாளர் திருமதி கேர்ல்டுஸ்மித் அம்மையார் ஆவார். இவர் ஃபிரெஞ்சு நாட்டிலிருந்து, இங்குக் குடியேறி நீண்ட காலமாக வாழ்கிறார். இவருடைய உற்றார், உறவினர், எல்லாம் நாய்களே என்று சொன்னுல் கூடப் பொருந்தும். பூனையின் பருமனுள்ள நாயிலிருந்து, சிறுத்தை அளவுள்ள நாய்கள் வரையில் இங்கிருக்கின்றன.இவருடைய படுக்கை அறை மஞ்சத்தில் உரிமையோடு ஓர் ஆப்கானியச் சடைநாய் படுத்து உறங்கிக் கொண்டிருந்ததை கண்டோரும் உண்டு. இவருடைய சாய்வு நாற்காலியில், ஒரு சீன நாய் அரசனைப் போல் வீற்றிருந்ததையும் கண்டுள்ளன்ர். அல்சேஷன், புல்டெர்ரியர், முதலிய முரட்டு நாய்களும், சைனிஸ், ஆப்கன் முதலிய அழகு நாய்களும் இவரிடத்தில் பேணப் பட்டன. உயர்ந்த இன நாய்களைக் கலப்பின்றி உற்பத்தி செய்து,இவர் விற்று வந்தார். இங்கு இந்திய நாய் வளர்ச்சிக் கழகம் (Kennel Club of India) என்ற ஓர் அமைப்பு உள்ளது. இதன் பொறுப்பாளர், நம் நாட்டின் தலைவரான இராசேந்திர பிரசாத் இருந்தார். இதன் செயலாளராக நீண்டநாள் பணியாற்றிவருபவர், இந்த கோல்டுஸ்மித் அம்மையார் ஆவார். இந்திய நாட்டின் தலைமைக் கழகமே நாய்பங்களாதான். மாநிலங்களில் தனித்தனிக் கழகங்கள் உண்டு. நாய் இனத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது, நாய்க் கண் காட்சி (Dog Shows) களை நடத்துவது, நாய்களைப் பற்றிய சிறந்த செய்தித்தாள் ஒன்று நடத்துவது, உயர்ந்த இன நாய்களுக்கு அவற்றின் தகுதியறிந்து சான்றிதழ் வழங்குவது எனப் பல நோக்கங்கள் இக் கழகத்திற் குரியவை. நாய்களைப் பற்றித் திருமதி கோட்டுஸ்மித் அம்மையார் நேர்கணாணலில் பின் வருமாறு குறிப்பிட்டார்;- மேலை நாட்டு நாய்களைப்போல், இந்திய நாட்டு நாய்களிலும் வலிமையும் அறிவும் உள்ள இனங்கள் உண்டு. இராசபாளையம், கோம்பை என்ற இரண்டு இனங்களும், இந்திய இனங்களில் சிறந்தவை. மேலை நாட்டு நாய்களுக்கு ஒப்பானவை என இவர் தெரிவிக்கிறார். உள் நாட்டு இனங்களின் மதிப்பை இந்திய இனத்தவர் உணராமல், இருக்கிறார்கள் என வருத்துப் படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • தமிழக அரசு தரும் சேலம் மாவட்ட காலக் கோடுகளை, ஆங்கிலத்தில் காணலாம்.

இப்பக்கங்களையும் காணவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏற்காட்டின்_கல்வியகம்&oldid=2536903" இலிருந்து மீள்விக்கப்பட்டது