உயிரியல் இடைவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரியல் இடைவினை (Biological interaction) என்பது சமூகத்தில் காணப்படுகின்ற உயிரிகளானது ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்வதாகும். இயற்கையில் எந்த உயிரியும் தனித்து காணப்படுவதில்லை, ஒவ்வொரு உயிரினமும் சுற்றுசூழலோடும் பிற உயிரிகளோடும் தொடர்பு கொள்கின்றன. சுற்றுசூழலோடு உயிரினத் இடைவினை கொள்வது என்பது உயிரினங்கள் வாழ்வதற்கும் மற்றும் சூழியலில் முழுமையாக இயங்குவதற்கும் பயன்படுகிறது.[1] சூழ்நிலையியலில், உயிரியல் இடைவினைபானது அவ்வுயிரியின் ஒரே சிற்றினத்துக்கிடையே தான் நடக்கிறது (சிற்றினத்தக இடைவினை) அல்லது உயிரியினுடைய வேறு சிற்றினத்துக்கிடையே நடைபெறுவது (வேறு சிற்றினத்தக இடைவினை). இவைகள் மேலும், செயலமைவுக்கான இயங்குமுறை அல்லது வலிமை, இடைவினை புரிய எடுத்துக் கொள்ளும் கால அளவு மற்றும் வழிகாட்டுதலின் தாக்கம் ஆகியவற்றைக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. [2] சிற்றினங்களானது இடைவினையானது ஒரு தலைமுறை வரை நடக்கிறது (எடுத்துக்காட்டு: மகரந்தச்சேர்க்கை) அல்லது இன்னொரு உயிரியில் முழுமையாக வாழ்கிறது (எடுத்துக்காட்டு: உள்ளுறை கூட்டுயிராதல்). உயிரினங்களின் உணவு செயல்பாடு மற்ற உயிரிகளின் உணவு விளைவுகளின் வரம்பைச் சார்ந்தே அமைகிறது. அவையாவன: இரைப் பிடித்து உண்ணுதல், தாவர உண்ணிகள் மற்றும் தன்னின ஊன் உண்ணுதல் ஆகும். சில உயிரிகள் ஒன்றுக்கொன்று இசைவான ஆதாயம் பெற்றுக் கொள்கிறது இதை பரிமாற்ற வாழ்க்கை என்கிறோம். இடைவினை புரிதல் நேரிடையாக நடக்க வேண்டும் என்பதில்லை; ஒருவேளை உயிரிகள் வளங்களை பகிர்ந்து கொள்ளும் போது அல்லது பொதுவான எதிரிகளால் மறைமுகமாகக் கூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.

வரலாறு[தொகு]

இருந்த போதிலும் உயிரியல் இடைவினையானது, உயிரிகளில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நடைபெறுகிறது என்பதை முதன்முதலில் எட்வர்ட் கேக்கல் (1946) கண்டறிந்தார். உயிரினங்களின் ஒன்றுக்கொன்றான தொடர்பு என்பதை இணைந்து செயல்படுதலாக குறிப்பிட்டிருந்தார். உயிரிகளை வகைப்படுத்தும் போது 'இணைந்து செயலாற்றுதல்' என்று வரையறுத்தார். [3] பின்பு உயிரியலாளர்கள் 'இடைவினை' என்றும் அழைத்தனர். [4][5][6]

செயல்திறல் அடிப்படையில் இடைவினையின் வகைப்பாடு[தொகு]

உடல் வீரியத்தைக் கொண்டு மற்ற உயிரிகளுக்கு நன்மை அல்லது தீமை தரக் கூடிய வகையில் உள்ள உயிரினங்களை ஆறு வகைகளாக இணைக்கப்பட்டது. அவைகள் செயல்திறல் அடிப்படையில் இடைவினையானது பரஸ்பர சார்ந்து கூறப்படுகிறது.

கூடிவாழும் உயிரிகளில் ஒன்று மட்டும் நன்மை பெறுவது[தொகு]

கூடிவாழும் உயிரிகளில் ஒன்று நன்மைபெறும் மற்றொன்று பாதிக்கப்படும் இந்த இடைவினையைப்பற்றி அறிமுகப்படுத்தியது கேக்கல் ஆவார். [7] இம்முறையில் ஒரு உயிரி மற்ற உயிரிக்கு எந்த வித நன்மையோ அல்லது நோக்கமோ இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தும். [8] எடுத்துக்காட்டாக, ஒரே புல்வெளியில் மேய்கின்ற கால்நடைகள் மாடு மற்றும் ஆடுகளின் காலடி குழம்புபடுவதால் புல் உண்ணுவதற்கு ஏற்ற வகையில் இல்லாம போதல் ஆகும்.

நடுநிலைமை கொள்கை[தொகு]

நடுநிலைமை கொள்கையைக் வரையறுத்தவர் யுஜின் ஓடம் ஆவார். [9] இவர் இருசிற்றினங்கள் இடைவினை புரியும் போது ஒன்றுக்கொன்று பாதிக்காத வகையில் இருக்கிறது. ஆனால் இக் கொள்கையானது முழுவதுமாக நிரூபிக்கப்படாமல் உள்ளது.[10]

சூழல்சார் இயல்புச் செயல் ஒடுக்கம்[தொகு]

சூழல்சார் இயல்புச் செயல் ஒடுக்க இடைவினை புரியக் கூடிய உயிரினங்களானது இரண்டுமே பயன்பெற கூடியவையாக இருக்கின்றன அல்லது வேறு சிற்றினத்தை துன்புறுத்தாமல் இருக்கின்றன.[11] நிறைய பழைய சூழியல் கொள்கையானது எதிர்மறையான இடைவினையைக் குடுக்கக் கூடியவையாக இருக்கின்றன (எடுத்துக்காட்டு: இயற்கை தேர்வு செய்தல், வாழிட வேறுபாடு). ஆனால் நேர்மறையான இடைவினையை தரக்கூடியவையாக இருப்பவை இரை பிடித்து உண்ணுதல் மற்றும் போட்டிகள் போன்ற வாழ்க்கை ஆகியவை அதிகமான சூழியலில் ஆய்வை மேற்கொள்கிறது. </ref>[12][13]

இணை வாழ்வு முறை[தொகு]

இணை வாழ்வு முறையில் இரண்டு உயிரிகளில் ஒன்று நன்மையடைகிறது ஆனால் மற்றொன்று நன்மையும் அடைவதில்லை தீமையும் அடைவதில்லை. இடைவினையில் விருந்தோம்பி நிச்சயமாக தீமையடைவதில்லை. எடுத்துக்காட்டு: ரிமோரா மற்றும் சுறாவின் இணை வாழ்வு முறை. ரிமோரா என்ற சிறிய வகை மீனானது சுறா மீன் அடிப்பகுதியில் ஒட்டி வாழக் கூடியது. இது சுறா மீன் உண்ட மிச்சத்தை மட்டுமே உண்டு வாழ்வதால் சுறாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

பரிமாற்ற வாழ்க்கை[தொகு]

தேனீ மகரந்ந சேர்க்கைக்கு உதவுதல் - பரிமாற்ற வாழ்க்கை

பரிமாற்ற வாழ்க்கையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரிகள் சேர்ந்து வாழக் கூடியது. இந்த வகை வாழ்க்கை முறை ஒரே சிற்றினத்தில் இருந்தால் அதற்கு கூட்டுறவு வாழ்க்கை எனப்படுகிறது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிரிகள் சேர்ந்து வாழ்வது மாற்று இல்லா வாழ்க்கை எனப்படுகிறது. எடுத்துக்காட்டு: துாய்மைப்படுத்தும் மீன்கள், மகரந்தசேர்ககை, விதை பரவல்.

கூட்டு வாழ்க்கை[தொகு]

கூட்டு வாழ்க்கையில் நெருங்கிய உறவாக உயிரியானது மற்ற சிற்றினத்தில் இடைவினை புரியக் கூடியது. இதில் பங்கு பெறும் இரண்டு உயிரிகளில் இரண்டுமே பயன்படக் கூடியது. சில நேரங்களில் இது பொதுவாக எல்லா விதமான ஒப்பீட்டளவில் இறுக்கமான உறவுகளை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இவை ஒட்டுண்ணி வாழ்க்கையை குறிக்கிறது ஆனால் இரை பிடித்து வாழும் வாழ்க்கையை குறிக்காது.[14]

போட்டி வாழ்க்கை[தொகு]

ஆண் சிவப்பு மான்களுக்கிடையே நடக்கக் கூடிய போட்டி - போட்டி வாழ்க்கை

போட்டி வாழ்க்கை இடைவினையானது உயிரிகளிடமோ அல்லது சிற்றினங்களுக்கு இடையேயோ நடக்கக் கூடியது. இதில் உடல் வலிமை பெற்ற உயிரி வெல்லுகிறது. இந்த போட்டிகள் இனபெருக்கத்தின் போது பெண் உயிரினங்களுக்காக நடைபெறுகிறது. உயிர் மற்றும் உயிரற்ற காரணிகளுக்காக நடக்கக் கூடிய போட்டிகளானது சமூக அமைப்பைப் பாதிக்கின்றன. ஒரே சிற்றினத்துக்குள் ஏற்படக் கூடிய போட்டியானது சிற்றினத்தக போட்டியாகவும், இரண்டு வெவ்வேறு சிற்றினத்துக்குள் ஏற்படக் கூடிய போட்டியானது இனங்களிடையேயான போட்டியாகவும் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Elton, C.S. 1968 reprint. Animal ecology. Great Britain: William Clowes and Sons Ltd.
  2. Wootton, JT; Emmerson, M (2005). "Measurement of Interaction Strength in Nature". Annual Review of Ecology, Evolution, and Systematics 36: 419–44. doi:10.1146/annurev.ecolsys.36.091704.175535. 
  3. Haskell, E. F. (1949). A clarification of social science. Main Currents in Modern Thought 7: 45–51.
  4. Burkholder, P. R. (1952) Cooperation and Conflict among Primitive Organisms. American Scientist, 40, 601-631. link.
  5. Bronstein, J. L. (2015). The study of mutualism. In: Bronstein, J. L. (ed.). Mutualism. Oxford University Press, Oxford. link.
  6. Pringle, E. G. (2016). Orienting the Interaction Compass: Resource Availability as a Major Driver of Context Dependence. PLoS Biology, 14(10), e2000891. http://doi.org/10.1371/journal.pbio.2000891.
  7. Toepfer, G. "Amensalism". In: BioConcepts. link.
  8. Willey, Joanne M.; Sherwood, Linda M.; Woolverton, Cristopher J. (2013). Prescott's Microbiology (9th ). பக். 713–38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-07-751066-4. 
  9. Toepfer, G. "Neutralism". In: BioConcepts. link.
  10. (Morris et al., 2013)
  11. Stachowicz, J. J. 2001. Mutualism, facilitation, and the structure of ecological communities. BioScience '51': 235-246.
  12. Bruno, J. F., J. J. Stachowicz, and M. D. Bertness. 2003. Inclusion of facilitation into ecological theory. TREE 18: 119-125.
  13. Tirado, R. and F. I. Pugnaire. 2005. Community structure and positive interactions in constraining environments. OIKOS 111: 437-444.
  14. Surindar Paracer and Vernon Ahmadjian, "Symbiosis: An Introduction to Biological Associations" ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். 2nd Ed. 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-511806-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியல்_இடைவினை&oldid=2756277" இலிருந்து மீள்விக்கப்பட்டது