டைமர் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டைமர் அமிலங்கள் (Dimer acid) அல்லது குறைக்கப்பட்ட கொழுப்பு அமிலங்கள் என்பது டை கார்பாக்சிலிக் அமிலங்கள் ஆகும். இவ்வகை அமிலங்கள் டால் எண்ணெயிலிருந்து களிமண் வினை ஊக்கிகளைப் பயன்படுத்தி குறைப்பதன் மூலம் தயாரிக்கப்படுபவை. இவற்றின் சிஏஎஸ் எண் [61788-89-4] ஆகும். டைமர் அமிலங்கள் பாலிஅமைடு ரெசின்கள் மற்றும் பாலிஅமைடு சூடான உருகிய பசைகள் ஆகியவற்றின் தொகுப்பிற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. டைமர் அமிலங்கள் அல்கைடு ரெசின்கள், பசைகள், சர்பாக்டான்ஸ், எரிபொருள் எண்ணெய் கூட்டுப் பொருட்கள் மற்றும் உயவுப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.[1] இது இலேசான மஞ்சள் அல்லது மஞ்சள் நிற பிசுபிசுப்பபான ஒளி புகக்கூடிய திரவமாகும். இது நச்சுப் பொருள் அல்ல.

டைமர் அமிலத்தில் வழக்கமாக ஸ்டீரியிக் அமிலத்தைப் போன்ற இரட்டை அமைப்பு இருக்கலாம். இது C36 டைமர் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. [2] டிரைமர் அமிலம் என்பது டைமர் அமிலத்தின் தொடர்ச்சியாகும். எனவே, இதில் டைமரைப் போன்று மூன்று மூலக்கூறுகள் இணைந்த கொழுப்பு அமில அமைப்பு இருக்கலாம். இதன் விளைவாக மூன்று மூலக்கூறுகள் இணைந்த கொழுப்பு அமிலமாக உள்ளது. அதன் சிஏஎஸ் எண் [68937-90-6] ஆகும்.

அம்மோனியாவுடன் ஒடுக்க வினைக்கு உட்படும் போது டைமர் அமிலங்கள் டைமர் அமீன்களாக மாற்றமடைகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைமர்_அமிலம்&oldid=2493942" இலிருந்து மீள்விக்கப்பட்டது