சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு (Syrian Observatory for Human Rights) என்பது ஐக்கிய இராச்சியத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்ற ஒரு செய்தி நிறுவனம் ஆகும்.. சிரியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதைக் கண்காணித்து வெளி உலகுக்கு அவ்வப்போது தெரிவிக்க, ரமி அப்துல் ரகுமான் என்பவரால் இந்தச் செய்தி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

2011 இல் சிரியாவில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் போது இந்த அமைப்பு உருவானது. மேற்கத்திய ஊடகங்களான வாய்ஸ் ஆப் அமெரிக்கா, ராய்ட்டர்ஸ், பிபிசி, சிஎன்என் போன்ற நிறுவனங்கள் சிரியா மனித உரிமைக் கண்காணிப்பின் செய்திகளை அடிக்கடி மேற்கோள் காட்டுகிற வழக்கம் உண்டு.[1][2]

மேற்கோள்[தொகு]

  1. "26 civilians killed in Syria on Friday: Observatory". The Asian Age. 18 February 2012. Archived from the original on 11 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 11 June 2012. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "Syrian Observatory for Human Rights". Syriahr.com. பார்க்கப்பட்ட நாள் 12 September 2012.