கோரக்பூர் அரசு மருத்துவமனை இறப்புகள்

ஆள்கூறுகள்: 26°48′44″N 83°24′3″E / 26.81222°N 83.40083°E / 26.81222; 83.40083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரக்பூர் அரசு மருத்துவமனை இறப்புகள்
உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தின் அமைவிடம்
நேரம்10 ஆகத்து 2017–இன்று
அமைவிடம்கோரக்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
புவியியல் ஆள்கூற்று26°48′44″N 83°24′3″E / 26.81222°N 83.40083°E / 26.81222; 83.40083
இறப்புகள்72

கோரக்பூர் அரசு மருத்துவமனை இறப்புகள் என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் நகரத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த இறப்புகளைக் குறிக்கும்.[1]

பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 2017 ஆம் ஆண்டின் ஆகத்து 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான 5 நாட்களில் சுமார் 60 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆகத்து 10, 11 தேதிகளில் 30 குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது. 12 பேர் மூளைக் காய்ச்சலால் இறந்ததாகவும், பிறர் ஆக்சிசன் தரப்படாமல் இறந்ததாகவும் மருத்துவமனை அறிவித்தது. அதன் பிறகான நாட்களில் நிகழ்ந்த இறப்புகளையும் சேர்த்து, மொத்தமாக 72 குழந்தைகள் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆக்சிசன் உருளைகளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்துக்கு உரூபாய் 67 இலட்சம் பணம் நிலுவையில் இருந்ததாகவும், அதனால் அந்த நிறுவனம் உருளைகள் வழங்குதலை நிறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தத் தட்டுப்பாட்டின் காரணமாக உரிய மருத்துவ சிகிச்சையை குழந்தைகளுக்கு தர இயலாததால் இறப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.[2]

உத்தரப் பிரதேச மாநில அரசின் எதிர்வினை[தொகு]

பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆக்சிசன் வழங்குதலில் ஏற்பட்ட தட்டுப்பாடுகளின் காரணமாக குழந்தைகள் இறக்கவில்லை என தெரிவித்தார். மாநில தலைமை அரசுச் செயலாளரின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள செயற்குழு இது குறித்து விசாரணை செய்யும் என்றும் தெரிவித்தார்.

இந்த மருத்துவமனை சார்ந்துள்ள மருத்துவக் கல்லூரியின் முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.[3]

எதிர்க்கட்சிகளின் எதிர்வினை[தொகு]

குழந்தைகளின் இறப்பிற்குப் பொறுப்பேற்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத், மருத்துவக் கல்வி அமைச்சர் அசுதோசு டேண்டன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என காங்கிரசு கருத்து வெளியிட்டது. மருத்துவமனை நிர்வாகம், ஆக்சிசன் வினியோகிக்கும் தனியார் நிறுவனம், மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின்மீது மனிதக் கொலை வழக்கு தொடர வேண்டும் என்றும் காங்கிரசு தனது கருத்தினைத் தெரிவித்தது. சமாஜ்வாதி கட்சி தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.[4]

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் (காங்கிரசு), முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். பி. என். சிங் (காங்கிரசு) ஆகியோர் இந்த மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "60 children die in five days in Gorakhpur hospital". தி இந்து. 12 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2017.
  2. "Gorakhpur hospital ignored warnings on oxygen supply". தி இந்து. 12 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2017.
  3. "60 குழந்தைகள் உயிரிழப்பு: உ.பி. மருத்துவக் கல்லூரி முதல்வர் இடை நீக்கம்". தினமணி. 13 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2017.
  4. "கோரக்பூர் துயரம்: யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்; காங்கிரஸ், சமாஜ்வாதி தாக்கு". தி இந்து (தமிழ்). 12 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2017.
  5. "கோரக்பூர் சம்பவம்: மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள 2 அமைச்சர்களைப் பணித்தார் யோகி ஆதித்யநாத்". தி இந்து (தமிழ்). 12 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2017.

வெளியிணைப்புகள்[தொகு]