நிங்ஷியென்
Appearance
நிங்ஷியென் என்பது கிழக்குச் சீனாவில் ஐஜியாங் மாகாணத்தின் வடகிழக்கிலிருக்கும் நகரமும் துறைமுகப் பட்டினமும் ஆகும். முன்னர் நிங்போ என்று வழங்கப்பட்டது.
அமைவிடம்
[தொகு]இந்நகரம் கங்ச்செள விரிகுடாக் கரையில் இருக்கிறது. இங்கு பஞ்சாலைகளும் மீன் துறைகளும் இருக்கின்றன.
பயன்கள்
[தொகு]பருத்தி, உப்பு, மீன், தேயிலை முதலியன ஏற்றுமதியாகின்றன. இங்கே கல்வி, சமயம் சார்ந்த பல பண்டைய கல்லூரிகளும் கோயில்களும் பௌத்த விகாரைகளும் இருந்தன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கலைக்களஞ்சியம் தொகுதி ஆறு