முகியித்தீன் புராணம்
முகியித்தீன் புராணம் என்பது பிற்கால இசுலாமியக் காப்பியங்களுள் ஒன்று. இந்நூலின் காலம் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பர்.[1] இந்நூலை இயற்றியவர் சேகுனாப்புலவர் ஆவார். பாட்டுடைத் தலைவர் முகியித்தீன் ஆண்டகை ஆவார்.[2]
நூலமைப்பு
[தொகு]இந்நூலில் இரண்டு காண்டங்களும், 1343 பாடல்களும் உள்ளன. பாடல்கள் யாவும் விருத்தப்பா எனும் பாவகையில் அமைந்துள்ளன. இரு காண்டங்கள்: 1. தன்னுயிர் காக்கும் தவநிலைக் காண்டம்.2. மன்னுயிர் காக்கும் மகத்துவநிலைக் காண்டம்.
நூலின் வேறுபெயர்
[தொகு]இந்நூலுக்குக், குத்பு நாயகம் எனும் வேறு பெயரும் உண்டு. முகியித்தீன் என்பது குத்பு நாயகத்தின் வேறு பெயர்.
பெயர்க்காரணம்
[தொகு]குத்பு - தூண், ஈரான் நாட்டைச் சார்ந்த அப்துல் காதிர் என்பவர் ஞானநெறிக்குக் குத்பு( தூண்) போல விளங்கியதால் குத்பு நாயகம் எனப்படுகிறார்.
கதைக்கரு
[தொகு]நபியின் மகள் பாத்திமா. இவளுக்கும் அலி என்பாருக்கும் பிறந்த மகன் அசன். இவன் பாத்திமாவின் 60 ஆவது வயதில் இறையருளால் பிறந்தான். இந்த அசனே முகியித்தீன் தாயின் வயிற்றில் கருவாக இருந்தபோதே ஞானக்கல்வி பெற்றதாக கதை அமைகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பாக்யமேரி (2008). வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு. சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். p. 375. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-234-1346-7.
- ↑ "முகியித்தீன் புராணம்". https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI1luty. பார்க்கப்பட்ட நாள் 16 July 2024.
{{cite web}}
: External link in
(help)|website=
உசாத்துணை
[தொகு]1) முகம்மது உவைஸ்,பீ.மு.அஜ்மல் கான்," இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 1,2 மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பதிப்பு-1986. 2) அடைக்கலசாமி," தமிழ் இலக்கிய வரலாறு " கழக வெளியீடு-1994.