நேர்மறையான கல்வி
நேர்மறையான கல்வி (Positive education) என்பது கல்வியில் தனிப்பட்டோரின் பலம் மற்றும் தனியாள் ஊக்குவித்தல் போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு கற்றலை மேம்படுத்த வலியுறுத்தும் நேர்மறை உளவியலை அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறை ஆகும். ஆசிரியர்கள் தங்களின் கருத்துப்படியான சராசரி மாணவர்களுக்கு பாடப்பொருள்களை சிறுமாற்றங்கள் செய்து வழங்குவது மற்றும் வகுப்பறைக் கல்வியை ஒட்டுமொத்தமாக ஒரே விதமான கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு முறையில் நகர்த்திச் செல்லும் வழக்கமான பள்ளி அணுகுமுறைகளைப் போலல்லாமல், நேர்மறைக் கல்வியைக் கையாளும் ஆசிரியர்கள் தனிப்பட்ட மாணவர்களின் நலனில் கவனம் செலுத்தும் நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள்.[1] ஒவ்வொரு மாணவருக்கும் கற்றலைத் தூண்டுவதற்குத் தகுந்த இலக்குகளை உருவாக்குதல் மற்றும் அவர்களின் இலக்குகளை அடைவதற்கான திட்டங்களையும் உந்துதலையும் உருவாக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது போன்ற முறைகளை ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். மாணவர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து தங்களின் வகுப்புத் தரநிலையை அடையச் செய்வதற்கு மாறாக, சீர்தரப்படுத்தப்பட்ட தேர்வு முறைமைகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட மாணவர்களின் நிலைகளுக்கேற்ப, இந்த கற்றல் இலக்குகளை தனிப்பயனாக்கி வழங்குகிறது. மாணவர்களை ஒருவருக்கொருவர் போட்டியிடச் செய்வதற்குப் பதிலாக, கற்றலானது ஒரு கூட்டுறவு செயல்முறையாக, அதாவது ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை உரிய முறையில் அங்கீகரித்து, அவர்கள் தரும் உள்ளீகளை மதித்து மேற்கொள்ளும் ஒரு செயல்முறையாகப் பார்க்கப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chen J., Mcnamee G. (2011). "Positive approaches to learning in the context of preschool classroom activities". Early Childhood Education Journal 39 (1): 71–78. doi:10.1007/s10643-010-0441-x. https://archive.org/details/sim_early-childhood-education-journal_2011-04_39_1/page/71.
- ↑ Walker, I., & Crogan, M. (1998). "Academic performance, prejudice, and the jigsaw classroom: New pieces to the puzzle". Journal of Community & Applied Social Psychology 8 (6): 381–393. doi:10.1002/(sici)1099-1298(199811/12)8:6<381::aid-casp457>3.3.co;2-y. https://www.researchgate.net/publication/246868865.