உள்ளடக்கத்துக்குச் செல்

சீர்தரப்படுத்தப்பட்ட தேர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போலந்தில் இளைஞர்கள் மதுரா தேர்வுகளை எழுதுதல். இந்த மதுராத் தேர்வு சீர்தரப்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வரும் மாணவர்களை ஒப்பிட பல்கலைக்கழகங்களுக்கு எளிதாக உள்ளது.

சீர்தரப்படுத்தப்பட்ட தேர்வு (standardized test) என்பது ஒரே போன்று "சீர்தரப்படுத்தப்பட்ட" வகையில் நடத்தப்பட்டு மதிப்பிடுதலும் முரணற்று சீராக உள்ள தேர்வாகும். வினாக்கள், நடத்துமுறை, நடத்துச்சூழல், மதிப்பீடு செயல்முறைகள், விளக்கங்கள் ஒரே சீராக இருக்குமாறு வடிவமைக்கப்பட்ட தேர்வுகளாகும்.[1] இவற்றில் நடத்தப்படுதலும் மதிப்பிடுதலும் முன்னரே முடிவு செய்தபடி சீரான முறையில் அமைந்திருக்கும்.[2]

தேர்வெழுதும் அனைவருக்கும் ஒரே போன்று ஒரே தேர்வு வழங்கபடும் அனைத்துத் தேர்வுகளுமே சீர்தரப்படுத்தப்பட்ட தேர்வுகளாகும். இவை உயர் பணயத் தேர்வுகளாகவோ, நேரம் கட்டுபடுத்தப்பட்ட தேர்வுகளாகவோ பலதேர்வுக் கேள்விகளாகவோ இருக்க வேண்டியதில்லை. இதற்கு எதிரான சீர்தரப்படுத்தப்படாத தேர்வுகள் வெவ்வேறுவருக்கு வெவ்வேறு தேர்வுகள் வழங்கப்படுதலும் அல்லது ஒரே தேர்வு வெவ்வேறு சூழல்களில் நடப்பதும் ஆகும்; காட்டாக ஒரு குழுவிற்கு மற்றதை விட அதே வினாத்தாளுக்கு குறைந்த நேரம் வழங்கப்படுதல் அல்லது ஒரே விடை ஒரு சாராருக்கு சரியென்றும் மறு சாராருக்கு தவறென்றும் மதிப்பிடுதல் போன்றவையாகும்.[3]

சீர்தரப்படுத்தப்பட்ட தேர்வுகள் ஒரு சாராருக்கு எளிதாகவும் மறுசாராருக்கு கடினமாகவும் இருப்பதில்லை; அனைவரும் ஒரே அளவுகோலால் மதிப்பிடப்படுகின்றனர். முரணற்று இருப்பதால் இத்தேர்வுகளின் மதிப்பீடுகளை தேர்வெடுத்தவர்களிடையே ஒப்பிடுவது எளிதாக உள்ளது.[4]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Sylvan Learning glossary, retrieved online, source no longer available
  2. Popham, W.J. (1999). Why standardized tests don't measure educational quality. Educational Leadership, 56(6), 8–15.
  3. Kozol, Jonathan (2005). The Shame of the Nation. Crown Publishers New York. pp. 109–134.
  4. Phelps, Richard P. "Role & Importance of Testing". nonpartisaneducation.org. பார்க்கப்பட்ட நாள் 2016-05-17.

வெளி இணைப்புகள்[தொகு]