பேரழிவு இடர் குறைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேரிடர் அபாயநேர்வு குறைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெருகிவரும் வெள்ளத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க கிராமங்கள் வீடுகளின் வடிவமைப்பை மாற்றியமைத்துள்ளன, மேலும் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு மக்களையும் உணவையும் கொண்டு செல்ல சிறிய படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான பேரழிவு இடரை குறைப்பது முக்கியமானது

பேரழிவு இடர் குறைப்பு (Disaster risk reduction) என்பது பேரழிவின் அபாயங்களைக் கண்டறிதல், மதிப்பிடுதல் மற்றும் குறைப்பதற்கான ஒரு முறையான அணுகுமுறையாகும். சமூகங்கள் எதிர்கொள்ளக்கூடிய பேரழிவுகளை எதிர்க்கும் திறனை அதிகரிப்பதன் மூலம் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பேரழிவு இடர் குறைப்பு பொதுவாக "வெவ்வேறு கால அளவீடுகள் மற்றும் உறுதியான இலக்குகள், குறிகாட்டிகள் மற்றும் காலவரை ஆகியவற்றில் இலக்குகள் மற்றும் குறிக்கோள்களை வரையறுக்க" கொள்கைகளாகப் பயன்படுத்தப்படுகிறது"[1]:16. இந்த கருத்து பேரழிவு இடர் மேலாண்மை என்றும் அழைக்கப்படுகிறது.

1970-களின் நடுப்பகுதியில் இருந்து இயற்கை பேரழிவு அபாயங்கள் மற்றும் பாதிப்பு குறித்த ஆராய்ச்சியின் வரைபடத்தால் பேரழிவு இடர் குறைப்பு வலுவாக பாதிக்கப்படுகிறது[2][3]. பேரழிவு இடர் குறைப்பு, பேரழிவுகளின் விளைவுகளைத் தணிப்பதன் மூலம், அபாயகரமான நிகழ்வுகளின் தீவிரம் மற்றும் அளவைக் குறைப்பதன் மூலம், மற்றும் மேம்பட்ட பின்னடைவை ஊக்குவிப்பதன் மூலம் சமூகங்களின் பாதிப்பைக் குறைக்கிறது[1]. காலநிலை மாற்றம் பேரழிவுகளாக மாறக்கூடிய அபாயகரமான நிகழ்வுகளின் தீவிரத்தை அதிகரித்து வருவதால், பேரழிவு இடர் குறைப்பு மற்றும் காலநிலை மாற்ற தழுவல் ஆகியவை பெரும்பாலும் வளர்ச்சி முயற்சிகளில் ஒன்றாக இணைக்கப்படுகின்றன[4]. வளர்ச்சி மற்றும் மனிதாபிமானப் பணியின் பெரும்பாலான துறைகளில் பேரழிவு இடரை குறைக்கும் முயற்சிகளுக்கு சாத்தியம் உள்ளது. உத்திகள் மற்றும் செயல்படுத்தல் சமூக தன்னார்வலர்கள், உள்ளூர் நிறுவனங்கள், மத்திய அரசாங்கங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச குழுக்களிடமிருந்தும் வரலாம்.

பேரழிவு இடர் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பு என்பது ஒரு முக்கியமான சர்வதேச முயற்சியாகும். இது 2022-ஆம் ஆண்டு வரை 123 நாடுகள் கூட்டாட்சி மற்றும் உள்ளூர் பேரழிவு இடர் குறைப்பு உத்திகளை பின்பற்ற உதவியது[5]:22. அக்டோபர் 13 அன்று, பேரழிவு இடரை குறைப்பதற்கான சர்வதேச தினம்,பேரழிவு இடர் குறைப்பின் தெரிவுநிலையை அதிகரிக்கவும், தடுப்புக் கலாச்சாரத்தை மேம்படுத்தவும் உதவியது. பேரழிவு இடர் மேலாண்மையில் சமூகங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளின் முக்கியத்துவம், பேரழிவு அபாயத்தை நிர்வகித்தல் மற்றும் இது வளர்ச்சியுடன் எவ்வாறு தொடர்புடையது, மற்றும் பேரழிவு தாக்கங்கள் மற்றும் பேரழிவு தடுப்பு உத்திகளின் பாலின உணர்திறன் ஆகியவை சில முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்களில் அடங்கும்.

சொற்பொருள் விளக்கமும் வாய்ப்பளவும்[தொகு]

பேரழிவு இடர் என்பது இன்னல், திறந்தவைப்பு மற்றும் காலநிலை மாற்ற மென்மை நிலை ஆகியவற்றின் விளைவாகும் என்பதை இடர் சமன்பாடு காட்டுகிறது. (இதில் 'x' என்பது கூறுகளுக்கு இடையேயான தொடர்பைக் குறிக்கிறது).[6]

பேரழிவு இடர் குறைப்பு என்பது ஐக்கிய நாடுகளின் பேரழிவு இடர் குறைப்பு அலுவலகத்தால் (UNDRR) இவ்வாறு சொற்பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது: புதிய மற்றும் ஏற்கனவே உள்ள பேரழிவு இடரை குறைத்தல் மற்றும் எஞ்சிய அபாயத்தை நிர்வகித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட செயல்களாக வரையறுக்கப்படுகிறது, இவை அனைத்தும் மீள்திறனை வலுப்படுத்துவதன் வாயிலாக நிலையான வளர்ச்சியை அடைவதற்கு உதவுகின்றன[1]:16.

பேரழிவு இடர் என்பது ஒரு சமூகம் அல்லது சமூகத்தை பாதிக்கக்கூடிய உயிர் இழப்பு, காயம் அல்லது அழிக்கப்பட்ட அல்லது சேதமடைந்த சொத்துக்கள். பேரழிவு இடர் மூன்று காரணிகளின் தொடர்பு காரணமாக விளைகிறது: இன்னல்(கள்), காலநிலை மாற்ற மென்மை நிலை, மற்றும் திறந்தவைப்பு[1]:14. இது "இடர் சமன்பாட்டில்" விளக்கப்பட்டுள்ளது.

பேரழிவு இடர் குறைப்பு மிகவும் பரந்த அளவில் உள்ளது: அதன் நோக்கம் வழக்கமான அவசரநிலை மேலாண்மையை விட மிகவும் பரந்த மற்றும் ஆழமானது மற்றும் பல துறைகளின் வளர்ச்சி மற்றும் மனிதாபிமான பணிகளுடன் இணைந்த நோக்கங்களை உள்ளடக்கியது.

பேரழிவு இடர் மேலாண்மை[தொகு]

கண்ணிவெடிகள் அதிக உயிர் இழப்பு மற்றும் காயங்களை ஏற்படுத்தும் ஒரு இன்னலாகும். லெபனானில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட பெண்மணிகள்.

1970-களில் இருந்து பேரழிவு இடர் மேலாண்மை சிந்தனை மற்றும் நடைமுறையில் பேரழிவுகள் ஏன் நிகழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. பேரழிவு ஏற்படும் முன் இடரை குறைக்கும் செயல்களிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது எதிர்ச்செயல் மற்றும் மீட்பு கட்டங்களை விட தணிப்பு மற்றும் தயார்நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இது அரசாங்கங்கள், பேரழிவு இடர் திட்டமிடுபவர்கள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது[7].

பேரழிவு இடர் குறைப்பு என்பது போதுமான அளவு பரந்த வடிப்பு தெளிவாக இருந்தாலும், அதை வரையறுப்பது அல்லது விரிவாக விளக்குவது கடினமான அனைத்தும் தழுவிய கருத்தாகும். சமூக மென்மை நிலை மற்றும் பேரழிவு இடர்களை குறைப்பதற்கான கொள்கைகள், உத்திகள் மற்றும் நடைமுறைகளின் பரந்த வளர்ச்சி மற்றும் பயன்பாடு என்று பொதுவாக புரிந்து கொள்ளப்படுகிறது. அதன் கொள்கை இலக்குகள் மற்றும் நோக்கங்கள் பேரழிவு இடரை குறைக்கும் உத்திகள் மற்றும் திட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ளன[1]:16.

'பேரழிவு இடர் மேலாண்மை' (disaster risk management) என்ற சொல் பெரும்பாலும் ஒரே சூழலில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஒரே பொருளைக் குறிக்கிறது. இது ஆபத்துகள் மற்றும் மனித நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இடர்களைக் கண்டறிதல், மதிப்பிடுதல் மற்றும் குறைப்பதற்கான ஒரு முறையான அணுகுமுறையாகும். பேரழிவு இடர் மேலாண்மை பேரழிவு இடர் குறைப்பு முன்முயற்சிகளின் நடைமுறைச் செயலாக்கம் ஆதலால், அதன் செயல்பாட்டு அம்சங்களுக்கு சரியாகப் பயன்படுத்தப்படுகிறது[8]. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பேரழிவு இடரை குறைப்பது என்பது பேரழிவு இடர் மேலாண்மையின் கொள்கை நோக்கமாகும்[1].

மீள்திறன்[தொகு]

மீள்திறன் என்பது ஒரு தடங்கலின் பரிமாணத்தையும் கால அளவையும் எத்தகைய பயன்திறனுடன் ஒரு அமைப்பால் குறைக்க இயலுகிறது என்று விஞ்ஞானரீதியாக வரையறுக்கப்படுகிறது. இக்கருத்து இரண்டு வடிவங்களை எடுக்கலாம்: கடினமான, மற்றும் மென்மையான மீள்திறன். கடினமான மீள்திறன் என்பது அழுத்தத்தைத் தாங்கும் கட்டமைப்பின் வலிமையைக் குறிக்கிறது, அதே சமயம் மென்மையான மீள்திறன் என்பது ஒரு அமைப்பு அதன் முக்கிய செயல்பாட்டை மாற்றாமல் சீர்குலைக்கும் நிகழ்விலிருந்து மீள முடியுமா என்பதை பொறுத்துள்ளது[9].

மாற்றாக, பேரழிவு இடர் குறைப்புக்கான ஐக்கிய நாடுகளின் சர்வதேச உத்தி (United Nations International Strategy for Disaster Reduction - UNISDR) மீள்திறனை இவ்வாறு வரையறுக்கின்றது: "இயற்கை இன்னல்/களுக்கு ஆளான ஒரு அமைப்பு, பிரிவு அல்லது சமூகம் அதன் அத்தியாவசிய அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுத்தல் உட்பட ஒரு இன்னலின் விளைவுகளை சரியான நேரத்தில், திறமையான முறையில் எதிர்த்தல், உள்ளீர்த்தல், இணக்குவித்தல் மற்றும் மீட்டெடுத்தல் ஆகியவற்றில் காட்டும் திறமையே"[10].

காலநிலை மாற்றத்தின் விளைவுகள்[தொகு]

வறட்சி, வெள்ளம் மற்றும் சூறாவளி போன்ற இன்னல்கள் இயற்கையாக நிகழும் நிகழ்வுகள்[11]. இருப்பினும், காலநிலை மாற்றம் இந்த இன்னல்களை மிகவும் நம்பமுடியாத, அடிக்கடி நிகழக்கூடிய, மற்றும் கடுமையானதாகவும் மாற்றியுள்ளது. இதனால் அவை பேரழிவு இடர்களுக்கு பங்களிக்கின்றன. ஒரு பேரழிவு என்பது மென்மை நிலையிலுள்ள சமூகத்தை பாதிக்கும் இயற்கையான இன்னலின் விளைவாகும். மோசமான திட்டமிடல் அல்லது மேம்பாடு அல்லது தயாரிப்பின்மை ஆகியவை மனித தோல்விகளாகும், இவை சமூகங்களை காலநிலை அபாயங்களுக்கு ஆளாக்குகின்றன[12]. இந்த நிகழ்வுகளின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்போது, அவை பெரும்பாலும் பேரழிவுகள் என்று அழைக்கப்படுகின்றன. பேரழிவுகள் அவற்றின் மக்கள் மீதான பாதிப்பின் மூலம் வரையறுக்கப்படுகின்றன: ஒரு இன்னல் ஒரு சமூகத்தை மூழ்கடித்தால் அல்லது எதிர்மறையாக பாதித்தால், அது பேரழிவாக கருதப்படுகிறது[13]. 2008-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆண்டுக்கு சராசரியாக 400 பேரழிவு நிகழ்வுகள் நிகழ்ந்தன, இது 1980களில் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும்[4].

காலநிலை மாற்றத்திற்கு அதிக பங்களிப்பை வழங்கும் நாடுகள் பெரும்பாலும் விளைவுகளை உணருவதில் மிகக் குறைந்த இடரில் உள்ளன. 2019-ஆம் ஆண்டு நிலவரப்படி, தனிநபர் பாதிப்புக்கு உள்ளான நாடுகள் மிகக் குறைந்த அளவு தனி நபர் உமிழ்வைத் வெளியிடுகின்றன, இன்னும் அதிக வறட்சி மற்றும் தீவிர இயர்பியலை அனுபவிக்கின்றன[14]. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, 1970 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் 91% இறப்புகள் வளரும் நாடுகளில் நிகழ்ந்தன. இந்த நாடுகளில் ஏற்கனவே இந்த நிகழ்வுகளுக்கு அதிக மென்மை நிலையும் குறைந்த மீள்திறனும் உள்ளதால் இது ஆபத்துகளின் விளைவுகளை மோசமாக்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 UNGA (2016). பேரழிவு இடரை குறைப்பது தொடர்பான குறிகாட்டிகள் மற்றும் சொற்கள் குறித்த திறந்தநிலை அரசுகளுக்கிடையேயான நிபுணர் பணிக்குழுவின் அறிக்கை. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை.
  2. ஷி, பெய்சூன்; காஸ்பர்சன், ரோஜர், தொகுப்பாசிரியர்கள் (2015). "இயற்கை பேரிடர் அபாயத்தின் உலக வரைபட நூல்" (in en-gb). IHDP/எதிர்கால பூமி-ஒருங்கிணைந்த இடர் ஆளுமை திட்டத் தொடர். doi:10.1007/978-3-662-45430-5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-662-45429-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:2363-4979. https://link.springer.com/book/10.1007/978-3-662-45430-5. 
  3. பியர்ஸ் பிளேக்கி; கான்னன், டெர்ரி; டேவிஸ், இயான்; விஸ்னர், பென் (2004). ஆபத்தில்: இயற்கை ஆபத்துகள், மக்களின் ஆபத்து மற்றும் பேரழிவுகள் (2-ஆவது ). இலண்டன்: ரூட்லெட்ஜ். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415252157. https://books.google.com/books?id=3CA8mT0vLFgC. 
  4. 4.0 4.1 மெக்பீன், கோர்டன் மற்றும் கரோலின் ரோஜர்ஸ். 2010. “காலநிலை இன்னல்கள் மற்றும் பேரழிவுகள்: திறன் மேம்பாட்டிற்கான தேவை.” WIRE-இன் காலநிலை மாற்றம் vol 1. 871-884. DOI: 10.1002/wcc.77
  5. UNDRR (2023). 2015-2030 பேரிடர் அபாயக் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பின் அமலாக்கத்தின் இடைக்கால மதிப்பாய்வு அறிக்கை. பேரழிவு இடர் குறைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் - UNDRR: ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
  6. கில், ஜே.சி., டங்கன், எம்., சியூரியன், ஆர்., ஸ்மால், எல்., ஸ்தூபாரு, டி., ஸ்க்லம்பெர்கர், ஜே, டி ரூட்டர் எம்., டிகெலோவன், டி., டோரேசன், எஸ்., கோட்டார்டோ, எஸ்., மிசியாக், ஜே., ஹாரிஸ், ஆர்., பெட்ரெஸ்கு, ஈ.சி., ஜிரார்ட், டி., காஜாய், பி., கிளாசென், ஜே., டை, ஆர்., சாம்பியன், ஏ., தலோஸ், ஏ. எஸ்., ... வார்டு, பி. 2022. MYRIAD-EU D1.2 பன்முக-இன்னல், பன்முக-இடர் வரையறைகள் மற்றும் கருத்துகளின் கையேடு. H2020 MYRIAD-EU திட்டம், மானிய ஒப்பந்த எண் 101003276, pp 75.
  7. § UN ISDR 2004, இடருடன் வாழ்வது: பேரழிவு இடர் குறைப்பு முயற்சிகளின் உலகளாவிய மதிப்பாய்வு (ஜெனீவா: பேரழிவு இடர் குறைப்புக்கான ஐ.நா. சர்வதேச மூலோபாயம்), [1]
  8. "பேரழிவு இடர் குறைப்பு" [Disaster Risk Reduction (DRR)]. WMO சமூக தளம் (in ஆங்கிலம்). உலக வானிலை அமைப்பு. n.d. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2022. பேரழிவு இடர் மேலாண்மை பேரழிவு இடர் குறைப்பின் நோக்கத்தை அடைவதற்கான செயல்முறைகள் மற்றும் செயல்களை உள்ளடக்கியது.
  9. ப்ரோக், வீரேண்டா (2014). "மென்மை நிலை மற்றும் மீள்திறன் பற்றிய கருத்து". தொடரப்பட்ட பொருளாதாரம் மற்றும் நிதி. 18: 369–376.
  10. பேரழிவு இடர் குறைப்புக்கான ஐக்கிய நாடுகளின் சர்வதேச உத்தி (UNISDR). (2009). 2009 UNISDR பேரழிவு இடரை குறைப்பதற்கான சொல்லியல். ஐக்கிய நாடுகள்.
  11. அரா பேகம், ஆர்., ஆர். லெம்பர்ட், இ. அலி, டி.ஏ. பெஞ்சமின்சென், டி. பெர்னாயர், டபிள்யூ. க்ரேமர், எக்ஸ். குய், கே. மாக், ஜி. நாகி, என்.சி. ஸ்டென்செத், ஆர். சுகுமார் மற்றும் பி. வெஸ்டர், 2022: அத்தியாயம் 1: புறப்படும் புள்ளி மற்றும் முக்கிய கருத்துக்கள். இல்: காலநிலை மாற்றம் 2022: பாதிப்புகள், தழுவல் மற்றும் மென்மை நிலை. காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழுவின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கைக்கு பணிக்குழு II-இன் பங்களிப்பு [H.-O. பார்ட்னர், டி.சி. ராபர்ட்ஸ், எம். டிக்னர், ஈ.எஸ். பொலோசான்ஸ்கா, கே. மின்டென்பெக், ஏ. அலெக்ரியா, எம். கிரெய்க், எஸ். லாங்ஸ்டோர்ஃப், எஸ். லோஷ்கே, வி. முல்லர், ஏ. ஓகேம், பி. ராமா (eds.)]. கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ், கேம்பிரிட்ஜ், ஐ.இரா. மற்றும் நியூயார்க், NY, அமெரிக்கா, pp. 121–196, எஆசு:10.1017/9781009325844.003.
  12. "இயற்கை பேரழிவுகள் ஏன் இயற்கையானவை அல்ல?". www.preventionweb.net (in ஆங்கிலம்). 14 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 2024-01-26. {{cite web}}: Check date values in: |date= (help)
  13. ஜிபுலேவ்ஸ்கி, ஜோசப் (ஏப்ரல் 14, 2001). "பேரழிவை வரையறுத்தல்: அவசர துறை முன்னோக்கு". தேசிய மருத்துவ நூலகம். மீட்டெடுக்கப்பட்டது அக்டோபர் 21, 2023.
  14. காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC), 2023: பிரிவுகள். இதில்: காலநிலை மாற்றம் 2023: தொகுப்பு அறிக்கை. காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழுவின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கைக்கு I, II மற்றும் III பணிக்குழுக்களின் பங்களிப்பு [முக்கிய எழுதும் குழு, ஹெச். லீ மற்றும் ஜே. ரோமெரோ (eds.)]. IPCC, ஜெனீவா, சுவிட்சர்லாந்து, pp. 35-115, doi: 10.59327/IPCC/AR6-9789291691647
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரழிவு_இடர்_குறைப்பு&oldid=3876442" இலிருந்து மீள்விக்கப்பட்டது