பேச்சு:பேரழிவு இடர் குறைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை தலைப்பு[தொகு]

பேரிடர் அபாயநேர்வு குறைப்பு என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட இந்த கட்டுரையின் தலைப்பை தற்பொழுது உள்ளது போல் பேரழிவு இடர் குறைப்பு என மாற்றுவதற்கான காரணங்களை பதிவுசெய்யவே இந்த பேச்சுப்பக்கத்தை பயன்படுத்துகிறேன்.

ஆங்கிலத்தில் Disaster Risk Reduction என்ற தலைப்பில் உள்ள இக்கட்டுரை, பேரழிவுகள் ஏற்படுவதன் சூழ்நிலைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படை காரணிகளான இன்னல்களை கண்டறிந்து அவைகளால் ஏற்படக்கூடிய இடர்களை குறைக்கும் உத்திகளை கையாளும் முறை பற்றியதாகும். ஆக, சொற்பொருள் விளக்கம் இதுபோன்ற கட்டுரைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இடர் என்பது ஆங்கிலத்தில் risk என்ற சொல்லை குறிப்பதாக விக்சனரியிலிருந்து தெரிய வருகிறது. ஆகவே பேரிடர் என்ற சொல், பெரியதொரு இடர் என்ற பொருளை தான் குறிக்கும். ஆங்கிலத்தில் disaster என்ற சொல்லுக்கு விக்சனரியில் பேரழிவு என்றும் பேரிடர் என்றும் பொருளாக கொடுக்கப்பட்டிருப்பதால் இவற்றில் எது இந்த கட்டுரையின் சூழலுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று பார்க்கும்போது, பேரிடர் என்பதைவிட பேரழிவு தான் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால், பேரிடர் ஒரு வழிவகை என்றால் பேரழிவு என்பது ஒரு முடிவு. பேரழிவுகள் யாவும் முடிவடைந்த நிலையை குறிப்பதாகும், ஆனால் பேரிடர், பேரழிவாக முடியக்கூடும் ஆனால் உறுதியாக கூற இயலாது. உதாரணத்துக்கு, எரிமலை நிச்சயமாக ஒரு பேரிடர் தான் என்றாலும், அது வெடிக்கும் வரை பேரிழப்பு என்று கூறுவதில்லை. ஆக, ஒரு இழப்புக்கு சாத்தியக்கூறுகள் உள்ள ஒன்றை இடர் எனக்கூறலாமே தவிர, இழப்பு என கூற இயலாது. மேலும், இடர் குறைப்பு என்பது ஆங்கிலத்தில் risk reductionஐ குறிப்பதால், பேரிடர் இடர் குறைப்பு என்பதைவிட பேரழிவு இடர் குறைப்பு சிறந்தது என கருதினேன்.

தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே பல கட்டுரைகள் risk என்ற சொல்லை தமிழாக்கப்படுத்தியுள்ளன. உதா: இடர், இடர் மேலாண்மை, இடர் பகுப்பாய்வு (வணிகம்), ஆகியவை. ஆகவே அபாயநேர்வு என்ற சொல்லுக்கு பதில் இடர் என்ற சொல்லை பயன்படுத்தினேன்.

ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 08:35, 26 சனவரி 2024 (UTC)[பதிலளி]