பயனர்:TNSE BALAMURUGAN VNR/மணல்தொட்டி
அறிமுகம்
[தொகு]ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அறுவகைப் பெயர்ச்சொற்கள் 1.பொருள்பெயர் 2.இடப்பெயர் 3.காலப்பெயர் 4.சினைப்பெயர் 5.குணப்பெயர் (பண்புப்பெயர்) 6.தொழிற்பெயர்
பொருள் பெயர்
[தொகு]பொருளைக்குறிக்கும் பெயர் பொருள் பெயர். இது இருவகைப்படும்.அவை : உயிருள்ள பொருள்கள், உயிரற்ற பொருள்கள். உதாரணம் உயிருள்ள பொருள்கள் : குமரன்,தென்னை,செம்பருத்தி,வெள்ளாடு...முதலியன. உயிரற்ற பொருள்கள் : நாற்காலி,அடுப்பு,தட்டு,மண்,நீர்,காற்று...முதலியன.
இடப்பெயர்
[தொகு]ஓரிடத்தைக்குறிப்பது இடப்பெயர். உதாரணம் : வீடு,தெரு,பள்ளி,கோவில்,காடு,மலை...முதலியன.
காலப்பெயர்
[தொகு]காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர். உதாரணம் : நொடி,மணி,கிழமை,வாரம்,ஆண்டு...முதலியன.
சினைப்பெயர்
[தொகு]முழுமையான ஒன்றின் பகுதிகளைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர். சினை என்றால் உறுப்பு என்று பொருள். உதாரணம் : கண்,விரல்,இலை,கனி,விதை,கொம்பு...முதலியன.
குணப்பெயர்
[தொகு]நிறம்,அளவு,சுவை,வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் பெயர் குணப்பெயர்.இது பண்புகளைக் குறிப்பதால் பண்புப்பெயர் எனவும் வழங்கப்படும். உதாரணம் : வட்டப்பலகை,அழகு,பத்துக்கிலோ அரிசி,கருமை...முதலியன.
தொழிற்பெயர்
[தொகு]செய்யும் தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர். உதாரணம் : எழுதுதல்,ஆடல்,படித்தல்,கற்பித்தல்...முதலியன
.[1]
- ↑ மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (2015). தமிழ்நாடு அரசுப் பாடநூல் ,ஏழாம் வகுப்பு ,இரண்டாம் பருவம் ,தமிழ். இலக்கணம்: தமிழ்நாடு அரசு , பள்ளிக்கல்வித் துறை. pp. 32, 33, 34.