ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ
ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ (Otto Wilhelm von Struve) (மே 7, 1819 (Julian calendar: ஏப்பிரல் 25) – ஏப்பிரல் 14, 1905) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். உருசிய மொழியில் இவர் பெயர் வழக்கமாக, ஆத்தோ வாசில்யேவிச் சுத்ரூவ (Otto Vasil'evich Struve) (Отто Васильевич Струве) என அமைகிறது. இவரது தந்தையார், [[பிரீட்ரிக் கியார்கு வில்கெல்ம் வான் சுத்ரூவ]வும் இவரும் 19 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த வானியலாளர்களாக்க் கருதப்படுகின்றனர். இவர் 1862 முதல் 1889 வரை புல்கொவோ வான்காணகத்தின் தலையேற்றிருந்தார். இவர் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் முன்னணி உறுப்பினராக விளங்கினார்.
சொந்தவாழ்க்கையும் இறுதிக் காலமும்
[தொகு]
தகைமைகளும் விருதுகளும்
[தொகு]இவர் 1840 இல் வெளியாகிய "சூரியக் குடும்பத்தின் சீரியக்கத்தின் தலையாட்ட மாறிலியைத் தீர்மானித்தல்" எனும் ஆய்வுரைக்காக 1950 இல் அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கத்தை வென்றார் .[1][2] இவர் 1852 முதல் 1889 வரை சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராக இருந்தார்.அதேகாலத்தில் இவர் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தில் உறிப்பினராக இருந்து, 1856 இல் அதன் கல்வியியலாலரானார். இவர் 1874இல் நெதர்லாந்து அரசு கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினரானார்.[3] குறுங்கோள் 768 சுத்ரூவீனா ஆட்டொ வில்கெல்ம், பிரீட்ரிக் கியார்கு வில்கெல்ம், எர்மன் சுத்ரூவ ஆகியோரின் நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது;[4] நிலாவின் சுத்ரூவ குழிப்பள்ளம் வேறு மூன்று சுத்ரூவ குடும்ப உறுப்பினர்கள் பெயரில் அழைக்கப்படுகிறது:அதாவது. பிரீட்ரிக் கியார்கு வில்கெல்ம், ஆட்டோ விகெல்ம், ஆட்டோ சுத்ரூவ ஆகியோரின் நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது. சுத்ரூவ புவியளவை வில் (Struve Geodetic Arc) 2005 இல் உலக மரபுப் பட்டியலில் சேர்க்கபட்டது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dr. Otto Von Struve". Nature 72 (1855): 61. 1905. doi:10.1038/072061a0. Bibcode: 1905Natur..72Q..61.. https://archive.org/details/sim_nature-uk_1905-05-18_72_1855/page/n11.
- ↑ "Astronomy and the Struve Family". Nature 154 (3902): 206. 1944. doi:10.1038/154206a0. Bibcode: 1944Natur.154Q.206.. https://archive.org/details/sim_nature-uk_1944-08-12_154_3902/page/n19.
- ↑ "O.W. von Struve (1819 - 1905)". Royal Netherlands Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.
- ↑ Lutz D. Schmadel (2003). Dictionary of minor planet names. Springer. p. 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-00238-3.
- ↑ Struve Geodetic Arc, UNESCO
மேலும் படிக்க
[தொகு]- Nyren, M. (1906). "Otto Wilhelm Struve". Popular Astronomy 14: 352–368. Bibcode: 1906PA.....14..352N.
- ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)