வால்டேர் பாடே
வால்டேர் பாடே | |
---|---|
பிறப்பு | 1893|3|24 சுரோட்டிங்காசன், செருமானியப் பேரரசு |
இறப்பு | 1960|6|25|1893|3|24 கோட்டிங்கன், மேற்கு செருமனி |
குடியுரிமை | செருமானியர் |
தேசியம் | செருமானியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | அம்பர்கு-பெர்கெடார்ஃப் வான்காணகம், மவுண்ட் வில்சன் வான்காணகம், பலோமார் வான்காணகம் |
கல்வி கற்ற இடங்கள் | கோட்டிங்கன் பல்கலைக்கழகம் |
முனைவர் பட்ட மாணவர்கள் | ஆல்ட்டன் ஆர்ப் ஆலன் சாந்தேகு |
விருதுகள் | புரூசு பதக்கம்,1955 |
வில்கெல்ம் ஈன்ரிச் வால்டேர் பாடே (Wilhelm Heinrich Walter Baade) (மார்ச்சு 24, 1893 – ஜூன் 25, 1960) ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவில் 1931 முதல் 1959 வரை பணிபுரிந்தார்.
வாழ்க்கை
[தொகு]இவர் 1919 இல் தன் முனைவர் பட்டம் பெற்றதும், ப்ர்ர்கெடார்ஃபில் உள்ள அம்பர்கு வான்காணகத்தில் 1919 முதல் 1931 வரை பணி செய்தார்.[1] அங்கு 1920 இல் 944 இடால்கோ குறுங்கோளைக் கண்டுபிடித்தார், இது சிறுகோள் வகையில் ஒன்றாகும். இது இப்போது செண்டார்சு என வழங்கப்படுகிறது. இது பெருங்கோள்களின் வட்டணைகளைக் குறுக்கிட்டு செல்கிறது.
இவர் 1931 முதல் 1958 வரை மவுண்ட் வில்சன் வான்காணகத்தில் பணிபுரிந்தார்.[2] அங்கே இரண்டாம் உலகப் போரின்போது, போர்க்கால ஒளிமாசு குறைந்த இருட்ட்டிப்பு நிலைமைகளைப் பயன்படுத்தி ஆந்திரமேடா பால்வெளியின் விண்மீன்களைத் தெளிவாக முதன்முதலாகப் பிரித்தறிந்தார். இந்த நோக்கீடுகள் விண்மீந்தொகையை விண்மீந்தொகை-1, விண்மீந்தொகை-2 என இரு பிரிவுகளாகப் பிரித்து வரையறுக்க உதவின. இதே நோக்கீடுகள் அவருக்கு இருவகை செபீடு மாறியல்பு விண்மீன்கள் நிலவுவதைக் கண்டறியவும் உதவின. இக்கண்டுபிடிப்பைப் பயன்படுத்திஅறிந்த புடவியின் உருவளவை மறுகணிப்புக்கு ஆட்படுத்த உதவியது. அப்புளின் 1929 ஆம் ஆண்டு மதிப்பீட்டை விட இவ்வளவு இருமடங்கு ஆகியது.[3][4][5] இதை இவர் உரோம் நகரில் 1952 இல் நடந்த பன்னாட்டு வானியல் ஒன்றியக் கூட்ட்த்தில் அறிவித்து அனைவரையும் வியப்புறச் செய்தார்.
பிரிட்சு சுவிக்கியுடன் இவர் மீயொளிர் விண்மீன் வெடிப்பை தனி வான்பொருளாக இனங்கண்டார்.[6][7] இவரும் சுவிக்கியும் நொதுமி விண்மீன்கள் நிலவுதலை முன்மொழிந்தனர். மேலும் மீயொளிர் விண்மீன் வெடிப்பு நொதுமி விண்மீன்களை உருவாக்குதலையும் முன்மொழிந்தனர்.
இவரும் உருடோல்ஃப் மின்கோவ்சுகியும் 1952 இல் தொடங்கி பல்வேறு கதிர்வீச்சு வாயில்களுக்கான ஒளியியல் எதிரமைப்புகளை இனங்கண்டனர்.[8] இவற்றில் சிக்னசு ஏ வும் அடங்கும். இவர் 10 குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். இவற்றில் நெடிய வட்டணை அலைவுநேரம் உள்ள 944 இடால்கோவும் அப்பொல்லோ வகைக் குறுங்கோளும் புதனைவிட மிக நெருங்கிய கதிரண்மையுள்ள 1566 இகாரசும் அமோர் குறுங்கோளும் 1036 கனிமீடும் அடங்கும்.
தகைமைகள்
[தொகு]930 வெசுட்டுபேலியா | மார்ச்சு 10, 1920 |
934 தூரிஞ்சியா | ஆகத்து 15, 1920 |
944 இடால்கோ | அக்தோபர் 31, 1920 |
966 முசுச்சி | நவம்பர் 9, 1921 |
967 எலியோனேப் | நவம்பர் 9, 1921 |
1036 கனிமீடு | அக்தோபர் 23, 1924 |
1103 சீகுவோயியா | நவம்பர் 9, 1928 |
1566 இகாரசு | ஜூன் 27, 1949 |
5656 ஓல்டுபீல்டு | அக்தோபர் 8, 1920 |
7448 போல்லாத் | ஜனவரி 14, 1948 |
விருதுகள்
- அயல்நாட்டு உறுப்பினர், நெதர்லாந்து அரசு கலை, அறிவியல் கல்விக்கழகம் (1953)[10]
- அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1954)
- புரூசு பதக்கம் (1955)
- அமெரிக்க வானியல் கழகத்தின் என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமை (1958)
இவரது பெயர் இடப்பட்டவை
- 1501 பாடே சிறுகோள்
- நிலாவின் பாடே குழிப்பள்ளம்
- நிலாவின் வல்லிசு கணவாய்
- இரு மெகல்லன் தொலைநோக்கிகளில் ஒன்று பாடே தொலைநோக்கி என வழங்குகிறது
- 1966 முசுச்சி எனும் சிறுகோள் இவரது புனைபெயரால் அழைக்கப்படுகிறது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Osterbrock, D. E. (Sep 2002). "Walter Baade, Dynamical Astronomer at Goettingen, Hamburg, Mount Wilson, and Palomar Observatories". SAO/NASA ADS Astronomy Abstract Service. Harvard Univ. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
- ↑ "1955 Brude Medalist". Sonoma State University. Archived from the original on 21 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Baade W (1944) The resolution of Messier 32, NGC 205, and the central region of the Andromeda nebula. ApJ 100 137-146
- ↑ Baade W (1956) The period-luminosity relation of the Cepheids. PASP 68 5-16
- ↑ Allen, Nick. "Section 2: The Great Debate and the Great Mistake: Shapley, Hubble, Baade". The Cepheid Distance Scale: A History. பார்க்கப்பட்ட நாள் 19 November 2011.
- ↑ W. Baade, F. Zwicky, 1934, "On Super-Novae". Proceedings of the National Academy of Sciences of the United States of America, 254-259.
- ↑ Donald E. Osterbrock, Walter Baade – A Life in Astrophysics, Princeton und Oxford: Princeton University Press 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-04936-X. In his biography Osterbrock states, p. 32, that Baade in his inaugural lecture 1929 in Hamburg already used the German phrase "Hauptnova", "chief nova, Baades early word for a supernova" (Osterbrock).
- ↑ Baade, W. and Minkowski, R., 1954. Identification of the Radio Sources in Cassiopeia, Cygnus A, and Puppis A. Astrophysical Journal, Vol. 119, p. 206-214 (January 1954) ADS: 1954ApJ...119..206B
- ↑ "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 4 September 2016. பார்க்கப்பட்ட நாள் 7 September 2016.
- ↑ "Walter H.W. Baade (1893 - 1960)". Royal Netherlands Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
மேலும் படிக்க
[தொகு]- Osterbrock, Donald E (2001-11-01). Walter Baade: A Life in Astrophysics. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-04936-X.
- Dieke, Sally H. (1970). "Baade, Wilhelm Heinrich Walter". Dictionary of Scientific Biography 1. New York: Charles Scribner's Sons. 352–354. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-10114-9.
வெளி இணைப்புகள்
[தொகு]நினைவேந்தல்கள்
[தொகு]- AN 285 (1960) 286 (one sentence, in German)
- JRASC 55 (1961) 113
- MitAG 14 (1961) 5
- Obs 80 (1960) 166 (one sentence)
- PASP 72 (1960) 434 (one paragraph)
- QJRAS 2 (1961) 118