சோட்டோனெரா லாகசு
Appearance
சோட்டோனெரா லாகசு (Sotonera Lacus) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் எண்ணற்ற ஐதரோகார்பன் ஏரிகளில் இதுவும் ஒரு ஏரியாகும் [1]. 76.75° வ மற்றும் 17.49° மே [2] என்ற அடையாள ஆள்கூறுகளில் தோராயமாக 63 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக டைடனின் வடதுருவத்தின் மையத்தில் இந்த ஏரி காணப்படுகிறது. டைட்டனின் பெரிய ஏரிகள் யாவும் இதன் வடதுருவ மண்டலத்தில் காணப்படுகின்றன.
நீர்ம ஐதரோகார்பன்களான திரவ ஈத்தேனும் மீத்தேனும் [3] சேர்ந்து இந்த ஏரியை உருவாக்கியுள்ளன. கேசின் விண்வெளி ஆய்வு விண்கலம் இந்த ஏரியைக் கண்டுபிடித்தது. பூமியில் உள்ள எசுப்பானியாவின் சோட்டோனெரா ஏரியின் நினைவாக டைட்டனின் இந்த ஏரிக்கு சோட்டோனெரா லாகசு என்று 2007 ஆம் ஆண்டு பெயரிடப்பட்டது
-
சோட்டோனெராவின் நடு முற்றம்
-
சோட்டோனெரா உள்ளிட்ட ஏரிகள்
-
சோட்டோனெராவுடன் டைட்டனின் வடக்கு அரைக்கோளம்
.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Map of the liquid bodies in the north polar region of Titan.
- ↑ Planetary names
- ↑ Coustenis, A.; Taylor, F. W. (21 July 2008). Titan: Exploring an Earthlike World. World Scientific. pp. 154–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-281-161-5. இணையக் கணினி நூலக மைய எண் 144226016.