2017 பாட்னா படகு விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2017 பாட்னா படகு விபத்து
கங்கை நதி
நாள்14 சனவரி 2017
நேரம்18:00 (இந்திய சீர் நேரம்)[1]
அமைவிடம்கங்கை, பாட்னா, பீகார், இந்தியா
காரணம்அளவுக்கதிகமான பயணிகள் பயணித்தது
இறப்புகள்25
காணாமல் போனோர்12

பாட்னா படகு விபத்து என்பது இந்தியாவின் பீகார் மாநில தலைநகரான பாட்னாவில் கங்கை நதியில் 14 சனவரி, 2017 அன்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைக் குறிப்பதாகும்.

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 25 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் எனக்கருதப்படுகிறது மற்றும் பலர் காணவில்லை.[1][2] படகு கவிழ்ந்த போது படகு கரையை அடைய இருந்தது.[2]

சம்பவம்[தொகு]

பீகார் மாநிலத்தில் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மாநில அரசின் சுற்றுலாத் துறை சார்பில் கங்கை நதித் தீவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருவிழாவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.[2][3] இச்சம்பவம் பாட்னாவின் என்.ஐ.டி கணவாய் பகுதியில் ஏற்பட்டது[4]

காரணம்[தொகு]

படகில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றியதே விபத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.[5]

நிவாரணம்[தொகு]

இந்தியப் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF), இறந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ₹ 2 லட்சமும் மற்றும் சம்பவத்தில் தீவிரமாக காயமடைந்தவருக்கு ₹ 50 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.[1][6] பீகார் அரசு உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ₹ 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2017_பாட்னா_படகு_விபத்து&oldid=3802285" இலிருந்து மீள்விக்கப்பட்டது