உள்ளடக்கத்துக்குச் செல்

எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி (Economic and Political Weekly) என்பது மும்பையிலிருந்து சமீக்ச டிரஸ்ட் வெளியிடும் ஆங்கில ஆய்விதழ் ஆகும். 2016 ஏப்பிரல் முதல் தேதியிலிருந்து பரஞ்சோய் குகா தாகுர்தா என்னும் பத்திரிகையாளர் இந்த இதழுக்கு ஆசிரியராக அமர்த்தப்பட்டார். [1]

இதழின் வரலாறு

[தொகு]

1949 ஆம் ஆண்டில் எக்னாமிக் வீக்லி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த இதழ் 1966 இல் எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி எனப் பெயர் மாற்றப்பட்டது. கிருட்டினராசு என்பவர் இந்த இதழுக்கு ஆசிரியராக 30 ஆண்டுகள் பணி செய்தார். பின்னர் ஆசிரியர் பொறுப்பில் இருந்த ராம் மோகன் ரெட்டி விலக்கப்பட்டதும் பரஞ்சோய் குகா தாகுர்தா ஆசிரியராக அமர்த்தப்பட்டார்.

இதழின் கொள்கை

[தொகு]

சமூக உணர்வுடன் தலையங்கங்கள் இந்த இதழில் இடம் பெற்றன. இடது சாரி மற்றும் பொதுவுடைமை சார்ந்த கருத்துகள் கொண்ட கட்டுரைகள் சமூகவியல் அறிஞர்களால் எழுதப்பட்டு வெளி வந்தன. மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி ஆண்ட மேற்கு வங்க அரசின் செயல்பாட்டுக் குற்றம் குறைகளை சுட்டிக் காட்டி இந்த இதழ் எழுதியது.[2] இந்திரா காந்தி அமுல் படுத்திய நெருக்கடி நிலை, குஜராத்தில் 2002 இல் நிகழ்ந்த கலவரம் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சனம் செய்தது.[3]

மேற்கோள்

[தொகு]