உள்ளடக்கத்துக்குச் செல்

கராச்சி மாநகராட்சிக் கட்டிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவு நேர கராச்சி மாநகராட்சிக் கட்டிடம்

கராச்சி மாநகராட்சிக் கட்டிடம் (Karachi Municipal Corporation ) கராச்சியில் உள்ள எம் ஏ சின்னா சாலையில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம் ஆகும். இக்கட்டிடத்திற்கான அடிக்கல் 1927 ஆம் ஆண்டு நடப்பட்டு கட்டுமானப் பணிகள் 1930 ஆம் ஆண்டு நிறைவடைந்தன. 1932 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது[1]

2007 ஆம் ஆண்டு கராச்சி மாவட்ட அரசாங்கம் கராச்சி மாநகராட்சிக் கட்டிடத்தின் 75 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இதனை முன்னிட்டு கட்டிடம் பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்டது. அந்நேரத்தில் கட்டிடத்திற்குரிய மணிக்கூண்டும் பழுது பார்க்கப்பட்டது[2]. நமது கராச்சி திருவிழா 2007 என்ற பெயரில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. முச்சைரா எனப்படும் கவியரங்கம், கண்காட்சிகள், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இக்கொண்டாட்டங்களில் அடங்கும்.

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
  • "Hamara Karachi Festival Jan 6-18: Kolkata mayor to attend festival". Daily Times of Pakistan. December 28, 2006. பார்க்கப்பட்ட நாள் 2007-12-01.
  • ""Hamara Karachi" festival from Jan. 6". Office of the Governor of Sindh. November 29, 2006. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-12-01.