திபாங் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திபாங் ஆறு (Dibang River) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் பாயும் பிரம்மபுத்திரா நதியின் ஒரு கிளை ஆறு ஆகும்.

ஆற்றின் போக்கு[தொகு]

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் இருக்கும் இந்தோ-சீன எல்லையில் உள்ள கேயா கணவாய்க்கு அருகில் திபாங் ஆறு உற்பத்தி ஆகிறது. அருணாசலப் பிரதேசத்திற்குள் உள்ள ஆற்றின் வடிகால் பகுதியில் திபாங் பள்ளத்தாக்கு மற்றும் கீழ் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டங்கள் உள்ளடங்கியுள்ளன[1]. மிசுமி குன்றுகளில் இருந்து இறங்கிவரும் திபாங் ஆறு நிசாம்காட்டுக்கு அருகில் சமவெளிக்குள் நுழைகிறது. நிசாம்காட் மற்றும் சாதியா இடையே திபாங் ஆற்றின் பாதை ஒரு செங்குத்தான சாய்வாக உள்ளது. இக்கால்வாய் 4 முதல் 9 கிலோமீட்டர் வரையிலான அகலம் கொண்ட பின்னல் கால்வாய் அமைப்பியல் தோற்றத்தை அளிக்கிறது. திபாங் ஆறு அடிக்கடி தன் போக்கை மாற்றிக் கொள்வதால், கரையோரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் காடுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அழிவை ஏற்படுத்துகிறது.[2] அசாமிய நகரமான சாதியாவுக்கு அருகில், திப்ரு-சைக்கோவா சரணாலயத்திற்கு வடக்கில், 195 கிலோமீட்டர் நீளமுள்ள திபாங் ஆறு உலோகித் ஆற்றுடன் கலக்கிறது.[3][4]

கிளை ஆறுகள்[தொகு]

மதுன், தாங்கோன், திரை, இலிதுன் மற்றும் எம்ரா ஆகியன திபாங் ஆற்றின் பிரதானமான கிளை ஆறுகளாகும். மேலும் திபாங் ஆறு தன் பயணத்தில் ஏய்ரி பாணி, இலு பாணி, இமு பாணி, ஆகி, ஆச்சுபாணி, எப்பிபாணி மற்றும் தியோபாணி ஆகிய பல கிளை நதிகளுடன் இணைகிறது. பெரும்பாலான இக்கிளை ஆறுகள் குன்றின் மேற்பகுதியில் திபாங் ஆற்றுடன் கலப்பதால் அகலமான விசிறிவடிவ மீன்பிடிப்புப் பகுதியை உருவாக்குகின்றன.[1][2]

மின் உற்பத்தித் திட்டங்கள்[தொகு]

கீழ் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில், திபாங் பல்நோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக 2008 ஆம் ஆண்டில் பிரதமர் மன்மோகன் சிங் 3000 மெகாவாட் மின்னுற்பத்திக்கான ஒரு அணைக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தவிர திபாங் ஆற்றின் மீது 20 முதல் 4500 மெகாவாட் வரை மின்னுற்பத்தி திறன் கொண்ட 17 புதிய அணைகள் கட்டவும் பரிந்துரைக்கப்பட்டது. பரிந்துரைகளின்படி 288 மீட்டர் உயரத்தில் இவ்வணை கட்டி முடிக்கப் பட்டால் இது இந்தியாவின் மிகப்பெரிய அணையாகவும் உலக அளவில் மிக உயமான ஈர்ப்புமைய அணையாகவும் விளங்கும். அணையின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் மிசுமி மக்கள் அசாமியர்கள், மற்றும் பல்வேறு தரப்பினர் இத்திட்டத்தின் மீது எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர்.[1][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Damming Dibang River: Mishmi's resistance against 3000 MW Dibang Multipurpose Project". Archived from the original on 7 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 September 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Dibang Multipurpose Project - Chapter-4: Water Resources" (PDF). WAPCOS Limited. Archived from the original (PDF) on 2014-10-18. பார்க்கப்பட்ட நாள் 14 September 2013.
  3. "Restoration Proposal for Dibang & Lohit Rivers". பார்க்கப்பட்ட நாள் 14 September 2013.
  4. "Dibang sub basin of Brahmaputra Basin". National Institute of Hydrology. Archived from the original on 1 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 September 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Disquiet in Dibang". Down to Earth. 15 May 2008. http://www.downtoearth.org.in/node/4539. பார்த்த நாள்: 14 September 2013. 
  6. "Protests against public hearing on Dibang dam". The Assam Tribune. 5 March 2013 இம் மூலத்தில் இருந்து 16 அக்டோபர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141016124742/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=mar0513%2Fstate05. பார்த்த நாள்: 14 September 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபாங்_ஆறு&oldid=3930827" இலிருந்து மீள்விக்கப்பட்டது